/* */

கரூர் தொகுதியில் கணினி மூலம் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒதுக்கீடு

கரூர் நாடாளுமன்ற தொகுதியில் கணினி மூலம் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒதுக்கீடு செய்யும் பணி நடைபெற்றது.

HIGHLIGHTS

கரூர் தொகுதியில் கணினி மூலம் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் ஒதுக்கீடு
X

கரூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை கணினி மூலம் ஒதுக்கீடு செய்யும் பணி நடைபெற்றது.

கருர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு மின்னணுவாக்குப்பதிவு இயந்திரங்கள் இந்தியதேர்தல் ஆணைய இணையதளத்தின் மூலம் கணினி சுழற்சிமுறையில் ஒதுக்கீடுசெய்யப்பட்டது.

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, கருர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், இன்று மாவட்டதேர்தல் அலுவலர் / மாவட்ட கலெக்டர் தங்கவேல், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறை திறக்கப்பட்டு கருர் மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளுக்கும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை (EVM & VVPAT) இந்திய தேர்தல் ஆணைய இணையதளத்தின் (First Normal Randomization Process) ஒதுக்கீடுசெய்யப்பட்டது. இவை சமந்தப்பட்ட சட்டமன்ற தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.

கருர் மாவட்டத்தில், நாடாளுமன்றதேர்தல் வாக்குப்பதிவிற்காக 1051 வாக்குச்சாவடி மையங்கள் உள்ளது. 5135 வாக்குச்சாவடி அலுவலர்கள் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். 1260 கட்டுப்பாட்டு இயந்திரம் (control Unit), 1260 வாக்குப்பதிவு இயந்திரம் (Ballot Unit). 1365 வாக்காளர் தங்கள் அளித்த வாக்கினை சரிபார்க்கும் இயந்திரம் (VVPAT) தயாராக உள்ளது. அதனைத் தொடர்ந்து, இன்று (21.03.2024) நாடாளுமன்றதேர்தல் 2024-ஐ முன்னிட்டு, சம்பந்தப்பட்ட சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களை (EVM & VVPAT) ஒதுக்கீடு சய்வதற்காக இந்திய தேர்தல் ஆணையத்தின் இணையதளமான EMS போர்டல் மூலம் கணினி சுழற்சிமுறை (Randomization) நடைபெற்றது. அதன்படி ஒதுக்கீடு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சமந்தப்பட்ட சட்டமன்ற தொகுதிகளுக்கு அனுப்பிவைக்கப்பட உள்ளது என மாவட்ட தேர்தல் அலுவலர் / கலெக்டர் தங்கவேல், தெரிவித்தார்.

மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், தேர்தல் அலுவலர் சையதுகாதர், தனித்துணை ஆட்சியர் சைபுதீன், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பொறுப்பு அலுவலர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் இளங்கோ, வட்டாட்சியர் (தேர்தல்) முருகன், தேர்தல் அலுவலர்கள், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

Updated On: 21 March 2024 4:54 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை வனப்பகுதிகளில் தண்ணீர் தொட்டிகள் அமைப்பு
  5. ஆரணி
    புகையிலை பொருட்கள் பறிமுதல்; மூன்று பேர் கைது
  6. செங்கம்
    செங்கம் அருகேயுள்ள கிராம மக்களுக்கு தட்டுப்பாடு இல்லாமல் குடிநீா்...
  7. செய்யாறு
    கிராம விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரித்தல் செயல்விளக்கம்
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஓ ஆர் எஸ் கரைசல்...
  9. திருவண்ணாமலை
    வேளாண் கல்லூரி மாணவிகளுடன் கலந்துரையாடிய மாவட்ட கலெக்டர்
  10. ஈரோடு
    அந்தியூர் அருகே மாநில எல்லையில் 2 பேரிடம் ரூ.1.50 லட்சம் பறிமுதல்