/* */

கழிவுநீர் உறிஞ்சுகுழிகள் அமைக்க குமரி மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்

குமரியில், உறிஞ்சுகுழிகள் அமைத்து கழிவுநீரை வெளியேற்ற வேண்டும் என்று, ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

HIGHLIGHTS

கழிவுநீர் உறிஞ்சுகுழிகள் அமைக்க குமரி மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள்
X

மாவட்ட ஆட்சியர் அரவிந்த் 

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த் வெளியிட்டுள்ள அறிவிக்கை: கன்னியாகுமரி மாவட்டத்தில், நாளுக்கு நாள் பெருகி வரும் மக்கள் தொகை உள்ளிட்டவற்றால், மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து கழிவுநீர் மிக அதிக அளவில் வெளியேற்றப்படுகிறது.

இது மனித ஆரோக்கியத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளது. கழிவுநீர் கால்வாய்களிலும், குழாய்கள் மூலம் வாய்க்கால்களிலும் கலக்கப்படுவதால் நீர் மாசடைந்து , பாசன நிலங்களும் மாசடைந்து சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது . பொது இடங்களில் கழிவு நீர் வெளியேற்றப்படுவதால், அந்த இடம் மழைக்காலங்களில் சேரும் சகதியுமாக காட்சியளித்து கொசுக்கள் உற்பத்தியாக வழிவகுக்கிறது.

இதுகுறித்து நடவடிக்கை மேற்கொள்ளும் வகையில், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்பு கட்டிடங்கள், வணிக நிறுவனங்கள், தொழிற்கூடங்கள் ஆகியவற்றில் இருந்து உருவாகும் கழிவுநீர், முறையாக கையாளப்படுகிறதா என்பதை ஆய்வு செய்து, கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படுகிறது.

கணக்கெடுப்பின்போது, பொதுதிறவிடம், மழைநீர் வடிகால் அல்லது பிற இடங்களில் கழிவுநீர் வெளியேறுவதற்கு தடை செய்ய அறிவிப்பு உடனுக்குடன் வழங்கப்படவும். அக்கட்டிடங்களில் இருந்து கழிவுநீர் பொது இடத்தில் வெளியேராமல் தடுக்க கட்டிட உரிமையாளரால் கழிவுநீர் உறிஞ்சு குழி அமைக்க நடவடிக்கை எடுக்கவும், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளதாக, ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Updated On: 24 Sep 2021 6:15 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!