/* */

கன்னியாகுமரி பகுதியில் கனமழையால் 1200 ஏக்கர் விவசாயம் பாதிப்பு

கனமழை காரணமாக, கன்னியாகுமரி பகுதியில் விவசாயம் செய்யப்பட்ட1200 ஏக்கர் விவசாயம் பாதிப்பை சந்தித்து உள்ளது.

HIGHLIGHTS

கன்னியாகுமரி பகுதியில் கனமழையால் 1200 ஏக்கர் விவசாயம் பாதிப்பு
X

குமரி மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பயிர்கள்.

கன்னியாகுமரி மாவட்டத்தில், நான்காவது நாளாக நீடித்து வரும் கனமழை காரணமாக மாவட்டம் முழுவதும் பெரும் பாதிப்பை சந்தித்து உள்ளது. தொடர்ந்து நீடித்து வரும் கனமழை காரணமாகவும், மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலையோர பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாகவும், மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளான பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு உள்ளிட்ட அணைகள் முழு கொள்ளளவை எட்டியது.

இதனிடையே அணைகளில் இருந்து 12 ஆயிரம் கன அடி உபரி நீர் திறக்கப்பட்டது, இதன் காரணமாக திற்பரப்பு அருவி, தாமிரபரணி ஆறு, கோதையாறு, பரளியாறு, பழையாறு உள்ளிட்ட ஆறுகளில் காட்டாற்று வெள்ளம் உருவாகி ஊருக்குள் புகுந்ததால், மாவட்டம் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்து உள்ளன. சகாயநகர், தோவாளை, வெள்ள மடம், புத்தேரி, தெரிசனன்கோப்பு, உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட கிராமங்கள் தண்ணீரில் தத்தளித்து வருகின்றன.

மாவட்டம் முழுவதும் சுமார் 1200 க்கும் மேற்பட்ட நிலப்பரப்பில், விவசாயம் செய்யப்பட்ட நெல், வாழை, ரப்பர் விவசாயம் முற்றிலும் பாதிப்பை சந்தித்துள்ளது. இதே போன்று மாவட்டம் முழுவதும் 30 க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கான பொது போக்குவரத்து முற்றிலுமாக முடங்கி உள்ளது, கோதை கிராமம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் முற்றிலுமாக தண்ணீரில் மூழ்கி உள்ளன.

Updated On: 15 Nov 2021 12:30 PM GMT

Related News

Latest News

  1. செங்கம்
    செங்கம் அருகே நடந்த சாலை விபத்தில் கணவன்- மனைவி உயிரிழப்பு
  2. லைஃப்ஸ்டைல்
    ஆம்லா சாறு: இளமைக்கும் ஆரோக்கியத்திற்கும் அருமருந்து
  3. செய்யாறு
    செய்யாறு அருகே நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி வகுப்பு
  4. தொண்டாமுத்தூர்
    வெள்ளியங்கிரி மலையில் மூச்சுத்திணறல் காரணமாக பக்தர் உயிரிழப்பு
  5. இந்தியா
    ரூ.600 கோடி போதை பொருளுடன் பாகிஸ்தானில் இருந்து வந்த படகு பறிமுதல்
  6. ஈரோடு
    பவானி ஆறு வறண்டதால் ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும்...
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் கோடைகால பயிற்சி முகாம்
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மத்திய சிறை அருகே கைதிகள் நடத்த போகும் பெட்ரோல் பங்க்
  9. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்ற என் கல்லூரிக்கனவு நிகழ்ச்சி
  10. கவுண்டம்பாளையம்
    கோவை வாக்கு எண்ணிக்கை மையத்தை சுற்றியுள்ள பகுதி ரெட் ஜோனாக அறிவிப்பு