இளைஞர்களை சீரழிக்கும் போதைப் பொருட்கள் விற்பனையை தடுக்க பாஜக மகளிரணி வலியுறுத்தல்

போதை பழக்கத்தால் குடும்பமே சீரழிவதாகவும், கொலை, கொள்ளை, திருட்டு சம்பவங்களுக்கு வழிவகுப்பதாகவும் தெரிவித்துள்ளனர்

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
இளைஞர்களை சீரழிக்கும் போதைப் பொருட்கள் விற்பனையை தடுக்க பாஜக மகளிரணி வலியுறுத்தல்
X

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்த பாஜக மகளிரணி நிர்வாகிகள்.

சிறுவர்கள் மற்றும் இளைஞர்களை சீரழிக்கும் இது போன்ற போதைப் பொருட்கள் விற்பனை தாராளமாக நடைபெற்று வரும் நிலையில் அதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி பாஜக மகளிர் அணியை சேர்ந்தவர்கள் நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தை பொருத்தவரை அரசால் தடை செய்யப்பட்ட பான்பராக், குட்கா, புகையிலை உள்ளிட்ட பொருட்களின் விற்பனையை தடுக்க காவல்துறை பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதற்கென தனிப்படைகள் அமைத்து ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டு தடைசெய்யப்பட்ட போதை பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. எனினும் போலீசாரின் நடவடிக்கையை மீறி கன்னியாகுமரி மாவட்டத்தில் புகையிலை, பான்பராக், குட்கா உள்ளிட்ட பொருட்கள் தாராளமாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், சிறுவர்கள் மற்றும் இளைஞர்களை சீரழிக்கும் இது போன்ற போதைப் பொருட்கள் விற்பனை தாராளமாக நடைபெற்று வருவதைத்தடுக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, பாஜக மகளிர் அணி நிர்வாகிகள் நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

அதில்,போதை பழக்கத்தால் குடும்பமே சீரழிவதாகவும், கொலை, கொள்ளை, திருட்டு உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங்கள் நடப்பதற்கு போதை வழிவகுப்பதாகவும், இதனை தடை செய்ய வேண்டும். தடை செய்யப்பட்ட பொருட்கள் விற்பனை செய்வதையும் தடுக்க மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் குறிப்பிட்டுள்ளனர்..

Updated On: 13 Oct 2021 11:59 PM GMT

Related News