/* */

மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் அதிகாரிகள் ஆப்சென்ட் !!

வாரந்தோறும் திங்கட்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும்.

HIGHLIGHTS

மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் அதிகாரிகள் ஆப்சென்ட் !!
X

மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் சிவருத்தரய்யா தலைமையில் நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை காலை 10 மணி முதல் நண்பகல் ஒரு மணி வரை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறும். இதில் பொதுமக்கள் குடிநீர் வசதி, சாலை வசதி , வருவாய்த்துறை, ரேஷன் கார்டு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஆட்சியரையும் நேரில் சந்தித்து மனு அளிப்பது வழக்கம்.

இதில் அனைத்து துறை அதிகாரிகளும் பொதுமக்கள் அளிக்கும் மனுக்களை மாவட்ட ஆட்சியர் பரிந்துரையின் பேரில் விசாரணை மேற்கொண்டு நிவாரணம் காணுவது வழக்கம். இன்று வழக்கம் போல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சிவருத்தரய்யா தலைமையில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ஸ்ரீபெரும்புதூர் அருகே நடைபெறும் வேளாண்துறை நிகழ்ச்சிக்கு சென்றுள்ளதால் கூட்டத்தில் கலந்து கொள்ள இயலவில்லை.

மேலும் இக்கூட்டத்திற்கு காலை 10 மணிக்கு மாவட்ட துறை அலுவலர்கள் அனைவரும் வருகை புரியும் நிலையில் இன்று பெரும்பாலான அதிகாரிகள் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. பொதுமக்கள் அளிக்கும் மனு பரிந்துரை செய்து உரிய அலுவலர் ஒலி பெருக்கி அழைக்கும் போது பல அதிகாரிகள் கூட்டத்திற்கு வரவில்லை என்பதை தெரியவந்தது. இச்செயல் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Updated On: 23 May 2022 5:30 AM GMT

Related News

Latest News

  1. திருமங்கலம்
    ரேபரேலி காங்கிரஸ் கோட்டை: விஜய் வசந்த் எம்.பி. பேட்டி..!
  2. லைஃப்ஸ்டைல்
    கடன் இல்லா வாழ்க்கை வாழ ஆசை..!
  3. வீடியோ
    உன்ன யாருடா தடுத்து நிறுத்துனா? | வெறியான சந்தானம் |...
  4. அருப்புக்கோட்டை
    சேது பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான செஸ் போட்டி.!
  5. வீடியோ
    ஒழுகத்திற்கு ஆன்மீகம் ரொம்ப முக்கியம் |#santhanam -த்திடம் Amount...
  6. வீடியோ
    அரைகுறையா இருக்கும் சினிமா வேணாம்! கோவில்ல அம்மனை பார்த்தாலே போதும்!...
  7. திருப்பரங்குன்றம்
    தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு போக்க அரசு வேகம் காட்டவேண்டும்..!
  8. நாமக்கல்
    சிக்கன் ரைஸ் விஷ விவகாரத்தில் தாயும் உயிரிழப்பு : மகன் மீது இரட்டை...
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்..!
  10. வீடியோ
    கல்லூரியில் இடைமறித்து உதவிகேட்ட பெற்றோர் 😔 |தயங்காமல் KPY பாலா செய்த...