Begin typing your search above and press return to search.
டாஸ்மாக் கடையில் மது வாங்கி குடித்தவருக்கு மூக்கில் ரத்தம்: குடிமகன்கள்பீதி
தியாகதுருகம் அருகே அரசு மதுபான கடையில் மது வாங்கி குடித்தவருக்கு சிறிது நேரத்தில் மூக்கில் ரத்தம் வந்ததையடுத்து பரபரப்பு
HIGHLIGHTS

காவல் துறையினர் மதுபான கடையை மூடி பாதுகாப்பு பணியில் உள்ளனர்
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் ஒன்றியத்திற்குட்பட்ட விருகாவூர் கிராமத்தில் அரசு மதுபான கடையில், முடியனூர் கிராமத்தை சேர்ந்த செந்தில் என்பவர் மதியம் மதுபானத்தை வாங்கி குடித்தார்.
குடித்த சில நிமிடங்களில் மூக்கில் ரத்தம் வழியவே செந்தில் அச்சம் அடைந்துள்ளார். பயந்துபோன செந்தில் சேல்ஸ்மேனிடம் கேட்டுள்ளார். இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு பரபரப்பு நிலவியது.
இதனால் வரஞ்சரம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் இருக்க காவல் துறையினர் மதுபான கடையை மூடி பாதுகாப்பு பணியில் உள்ளனர். செந்திலை கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்