/* */

4 ஒன்றியங்களின் ஓட்டுப்பெட்டிகள் 24 மணிநேரமும் தீவிர கண்காணிப்பு: ஆட்சியர்

பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ள ஓட்டுப்பெட்டிகள் 24 மணி நேரமும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

4 ஒன்றியங்களின் ஓட்டுப்பெட்டிகள் 24 மணிநேரமும் தீவிர கண்காணிப்பு: ஆட்சியர்
X

பாதுகாப்பு அறை (Strong Room) மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள பகுதிகளை  மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், உளுந்தூர்பேட்டை உள்ளாட்சி பதவியிடங்களுக்கான ஓட்டுப்பெட்டிகள் கலைக்கப்படவுள்ள பாதுகாப்பு அறை (Strong Room) மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள பகுதிகளை மாவட்ட தேர்தல் அலுலவர், மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் இன்று ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், மாநில தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியபடி திருக்கோவிலூர், திருநாவலூர், ரிஷிவந்தியம் மற்றும் உளுந்தூர்பேட்டை ஆகிய ஒன்றியங்களுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு 06.10.2021 முடிவுற்றது. திருக்கோவிலூர் ஸ்ரீ வித்யா மந்திர் மேல்நிலைப் பள்ளி திருக்கோவிலூர் ஒன்றியத்திற்கும், திருநாவலூர் அன்னை தெரசா பொறியியல் கல்லூரி திருநாவலூரார் ஒன்றியத்திற்கும், உளுந்தூர்பேட்டை அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி உளுந்தூர்பேட்டை ஒன்றியத்திற்கும், அரியலூர் அரசினர் மேல்நிலைப் பள்ளி ரிஷிவந்தியம் ஒன்றியத்திற்கும் வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டு, காவல்துறை பாதுகாப்புடன் பாதுகாப்பு அறையில் வாக்குப் பெட்டிகள் வைக்கப்படவுள்ளது.

அதன் தொடர்ச்சியாக, இன்றைய தினம் உளுந்தூர்பேட்டை அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி வாக்கு எண்ணிக்கை மைய பாதுகாப்பு அறையில் ஆய்வு. வாக்குப்பெட்டிகள் வைக்கபடவுள்ள பாதுகாப்பு அறையினுள் உள்பக்கம் மற்றும் வெளிப்புறங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, கட்டுப்பாட்டு அறையில் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் கண்காணிப்புப் பணியும், காவல்துறையின் மூலம் பாதுகாப்புப்பணியும் மேற்கொள்ளப்படவுள்ளது.

மேலும், வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ள அறைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான பி.என்.ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.

இவ்வாய்வின் போது உளுந்தூர்பேட்டை தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Updated On: 7 Oct 2021 2:46 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?