/* */

ஈரோடு: நகர்புற உள்ளாட்சி தேர்தலில் 70.73 சதவீதம் வாக்குப்பதிவு

ஈரோடு மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 70.73 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

HIGHLIGHTS

ஈரோடு: நகர்புற உள்ளாட்சி தேர்தலில் 70.73 சதவீதம் வாக்குப்பதிவு
X

கோப்பு படம்.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி பதவிகளுக்கு கவுன்சிலர்களை தேர்வு செய்வதற்காக இன்று தேர்தல் நடைபெற்றது. ஈரோடு மாவட்டத்தில் ஒரு மாநகராட்சி, 4 நகராட்சிகள் மற்றும் 42 பேரூராட்சிகளில் காலியாக உள்ள 769 பதவிகளுக்கான தேர்தல் இன்று நடைபெற்றது. இதில் மொத்தம் 2,722 பேர் போட்டியிடுகின்றனர். இதனையொட்டி, மாவட்டம் முழுவதும் 1,219 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தது. இந்த தேர்தலில் மொத்தம் 9 லட்சத்து 84 ஆயிரத்து 113 பேர் வாக்களிக்க இருந்தனர். வாக்குப்பதிவு நடைபெறும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு உள்ள நிலையில், பதற்றமான 187 வாக்குச்சாவடிகளில் வெப் கேமரா மூலம் கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. தேர்தல் பாதுகாப்பு பணியில் 2 ஆயிரம் போலீசார் ஈடுபட்டு வரும் நிலையில், நுண்பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு கணிகாணித்து வந்தனர்.

அதன்படி இன்று காலை 7 மணிக்கு துவங்கிய வாக்குப்பதிவு, இன்று 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்தது. இந்தத் தேர்தலில் அரசியல் தலைவர்கள், நிர்வாகிகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு தொடர்பாக, ஈரோடு மாவட்டத்தில் உள்ள நகராட்சியில் 74.14 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. மாநகராட்சிகளில் 61.91 சதவிகிதமும், பேரூராட்சிகளில் 79.42 சதவிகித வாக்குகளும் பதிவாகியுள்ளன. இதில், நகராட்சியில் 96,195 பேர் தங்களது வாக்குகளை பதிவு செய்துள்ளனர். இதேபோல், மாநகராட்சிகளில் 2,72,249 பேரும், பேரூராட்சிகளில் 3,14,139 பேரும் தங்களது வாக்குகளை பதிவு செய்துள்ளனர். மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக 70.73 சதவீத வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

Updated On: 19 Feb 2022 4:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  2. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  3. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  4. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  5. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  6. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது
  7. மேலூர்
    மதுரை அருகே வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பது குறித்த மருத்துவ...
  8. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  9. மேலூர்
    மதுரை அருகே வெள்ளரி பட்டியில் நடைபெற்ற பாரம்பரிய பதவி ஏற்பு விழா
  10. திருவள்ளூர்
    அரசு பேருந்துகளின் அவல நிலை: உடனடியாக சீரமைக்க பயணிகள் கோரிக்கை