/* */

நாளை பொது விடுமுறை: ஈரோடு தேர்தல் அலுவலர் ராஜகோபால் சுன்கரா அறிவிப்பு

நாளை (ஏப்.19) பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

நாளை பொது விடுமுறை: ஈரோடு தேர்தல் அலுவலர் ராஜகோபால் சுன்கரா அறிவிப்பு
X

தமிழ்நாடு மக்களவைப் பொதுத்தேர்தல் 2024.

Erode News , Erode Today News - நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நாளான நாளை (ஏப்.19) வெள்ளிக்கிழமை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலரும் ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத்தேர்தல் வாக்குப்பதிவு நாளான நாளை (ஏப்ரல் 19ம் தேதி) வெள்ளிக்கிழமை ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து தனியார் தொழில்துறை மற்றும் வணிக நிறுவனங்கள், கடைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை வழங்க தேர்தல் ஆணையத்தால் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எனவே, அனைத்து தனியார் தொழில்துறை மற்றும் வணிக நிறுவனங்கள், கடைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, ஊதியத்துடன் கூடிய பொது விடுமுறை வழங்குமாறு தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பாக புகார் ஏதும் இருப்பின் தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்குமாறும், பொது விடுமுறை வழங்காத தொழில்துறை மற்றும் வணிக நிறுவனங்கள்/கடைகளின் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Updated On: 18 April 2024 6:47 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மகர ராசிக்கு எப்படி இருக்கும்?
  2. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: தனுசு ராசிக்கு எப்படி இருக்கும்?
  3. லைஃப்ஸ்டைல்
    தர்பூசணி, ஏன் அளவோடு உண்ணவேண்டும்? தெரிஞ்சுக்கங்க..!
  4. லைஃப்ஸ்டைல்
    காதல் கடந்து போகாது...! கூடவே பயணிக்கும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய்..அன்பே..அன்பே..!
  6. குமாரபாளையம்
    குமாரபாளையம் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  7. காஞ்சிபுரம்
    மர்மமான முறையில் 9 கால்நடைகள் உயிரிழப்பு ?
  8. வீடியோ
    ஜூன் மாதம் நடவிருக்கும் அதிரடி | அடுத்தடுத்து சிக்கும் திமுக...
  9. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: விருச்சிக ராசிக்கு எப்படி இருக்கும்?
  10. குமாரபாளையம்
    வக்கீல்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு..!