/* */

9 புதிய திட்டப்பணிகள் : அமைச்சர் முத்துசாமி துவக்கி வைத்தார்

குடிநீர், மின்விளக்கு உள்ளிட்ட 9 புதிய திட்டப்பணிகளை அமைச்சர் முத்துசாமி பூமி பூஜையிட்டு தொடங்கி வைத்தார்.

HIGHLIGHTS

9 புதிய திட்டப்பணிகள் : அமைச்சர் முத்துசாமி துவக்கி வைத்தார்
X

சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 9 புதிய திட்டங்களை துவக்கி வைத்த அமைச்சர் முத்துசாமி.

ஈரோடு மாவட்டம், சென்னிமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளான குட்டபாளையம், குமாரவலசு, முகாசிபுலவன்பாளையம் ஆகிய பகுதிகளில் வடிகால் அமைக்கும் பணி, குடிநீருக்கான பைப்லைன் அமைக்கும் பணி, எல்.இ.டி. மின்விளக்கு அமைக்கும் பணி , சாலைக்கு மெட்டல் அமைக்கும் பணி உள்ளிட்ட 9 புதிய திட்டப்பணிகளுக்கான துவக்க விழா இன்று நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் கிருஷ்ணனுண்ணி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் தமிழக வீட்டுவசதித்துறை அமைச்சர் முத்துசாமி கலந்து கொண்டு 80.62 லட்சம் ரூபாய் மதிப்பிலான புதிய திட்டப்பணிகளை பூமி பூஜையிட்டு தொடங்கி வைத்தார். அப்போது புதியதாக தொடங்கப்பட்டுள்ள திட்ட பணிகளை தரமாகவும், விரைவாகவும் முடித்திட வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இந்நிகழ்ச்சியில் சென்னிமலை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் காயத்ரி இளங்கோ உட்பட துறை சார்ந்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 21 Aug 2021 8:20 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு
  2. தமிழ்நாடு
    வலிமையான கரியமிலவாயு உறிஞ்சிகளாக இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா:...
  3. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
  4. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே சுவையான மக்கானா கீர் செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    ஏசி அறையில் தூங்கலாமா? கூடாதா? - விவரமா தெரிஞ்சுக்குங்க!
  6. லைஃப்ஸ்டைல்
    ஆழியில் கண்டெடுத்த அற்புத முத்து..! எங்க வீட்டு இளவரசி..!
  7. தமிழ்நாடு
    வாகனங்களில் ஸ்டிக்கர்களுக்கு தடை! விலக்கு அளிக்க வழக்கறிஞர்கள் சங்கம்...
  8. லைஃப்ஸ்டைல்
    என்றென்றும் நம் நினைவில் நிற்கும் ஆசிரியர்கள்
  9. திருவண்ணாமலை
    மாணவா்கள் இணையதள மோசடிகளில் சிக்காதீர்: கூடுதல் எஸ்.பி. அறிவுரை
  10. வீடியோ
    வரிசைகட்டி டூர் அடிக்கும் அரசியல்வாதிகள் |மலைப்பிரதேசங்களில் கூத்து...