/* */

கூண்டில் சிக்கிய சிறுத்தை; கோபி அருகே டி.என்.பாளையம் மக்கள் நிம்மதி

Erode news, Erode news today - ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அடுத்த டி.என்.பாளையத்தில் கால்நடைகளை கொன்ற சிறுத்தை சிக்கியதால், மக்கள் மற்றும் விவசாயிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

HIGHLIGHTS

கூண்டில் சிக்கிய சிறுத்தை; கோபி அருகே டி.என்.பாளையம் மக்கள் நிம்மதி
X

Erode news, Erode news today- தொங்குமரஹாடா வனப்பகுதியில் விடப்பட்ட சிறுத்தையை படத்தில் காணலாம்.

Erode news, Erode news today- கோபிசெட்டிபாளையம் அடுத்த டி.என்.பாளையத்தில் கால்நடைகளை கொன்ற சிறுத்தை சிக்கியதால், மக்கள் மற்றும் விவசாயிகள் நிம்மதியடைந்தனர்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த டி.என்.பாளையம் அடுத்த கொங்கர்பாளையம் ஊராட்சி பகுதிகளில் ஆடு, மாடு என கால்நடைகளை வேட்டையாடி வந்த சிறுத்தை, ராமசாமி என்பவரது தோட்டத்தில் கட்டி வைக்கப்பட்ட கன்று குட்டியை கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு கடித்துக் கொன்றது.

அதற்கு முன்பாக அதே பகுதியில் நஞ்சப்பன் என்கிற முருகேசன் என்பவரது தோட்டத்தில் கட்டி வைத்திருந்த ஆடு ஒன்றை கடித்து கொன்றது. இதைத் தொடர்ந்து டி என் பாளையம் வனத்துறையினர் ராமசாமி என்பவரது தோட்டத்தில் 5 இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு, சிறுத்தை நடமாட்டம் உறுதி செய்யப்பட்டது.

அதைத்தொடர்ந்து டி.என்.பாளையம் வனத்துறையினர், அந்த சிறுத்தை நடமாட்டம் உள்ள பகுதிகளில் கூண்டு வைத்து சிறுத்தை பிடிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். நேற்று காலை சிறுத்தை, வனத்துறை வைத்திருந்த கூண்டில் சிக்கியது, அதைத்தொடர்ந்து சிறுத்தையை பவானிசாகர் அடுத்த தொங்குமரஹாடா மூலப்பட்டி அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு விடப்பட்டது. கூண்டில் சிக்கியது, நான்கு வயதான பெண் சிறுத்தை என்று, வனத்துறையினர் தெரிவித்தனர்.

Updated On: 7 Aug 2023 7:00 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    அனைத்து மாவட்ட பதிவாளர்களுக்கு பத்திரப்பதிவு துறை தலைவர் சுற்றறிக்கை
  2. இந்தியா
    ஸ்டாலின் கைது செய்யப்படுவார்: கெஜ்ரிவால் திடீர் கண்டு பிடிப்பு
  3. வீடியோ
    மூன்று வருட திமுக ஆட்சி நிறைவு | சவுக்கு சங்கர் கைது | மக்களின் மனநிலை...
  4. இந்தியா
    4ம் கட்டமாக 96 நாடாளுமன்ற தொகுதி, ஆந்திர சட்டசபைக்கு நாளை தேர்தல்
  5. கல்வி
    ஆசிரியர் பணி கலந்தாய்வு தொடர்பாக பள்ளி கல்வி துறை இயக்குனரகம்...
  6. கல்வி
    கல்லூரி சேர்க்கையில் வெளிமாநில மாணவர்களால் பாதிப்பா?
  7. நாமக்கல்
    நீர்நிலைகளை மறைத்து சிப்காட்: தடுப்பு அணையில் நின்று விவசாயிகள்...
  8. தொழில்நுட்பம்
    இ-காமர்ஸ் சுரண்டல் அட்டை..! புதிய மோசடி..! உஷார் மக்களே..!
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்