/* */

கோடை வெயிலில் இருந்து பாதுகாத்து கொள்ள தற்காப்பு வழிமுறைகள் அறிவிப்பு

அதிக வெப்பம் நிலவுவதால், அதிலிருந்து பாதுகாத்து கொள்ள தற்காப்பு வழிமுறைகளை ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

கோடை வெயிலில் இருந்து பாதுகாத்து கொள்ள தற்காப்பு வழிமுறைகள்  அறிவிப்பு
X

ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா.

ஈரோடு மாவட்டத்தில் கோடை வெயில் காரணமாக அதிக வெப்பம் நிலவுவதால், அதிலிருந்து பாதுகாத்து கொள்ள பொதுமக்கள் தற்காப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்ற ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுன்கரா திங்கட்கிழமை (இன்று) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஈரோடு மாவட்டத்தில் தற்போது கோடை வெயிலின் வெப்பநிலை அதிகரிக்கும் என்றும், வெப்ப அலையின் தாக்கம் இருக்கலாம் என்றும், இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளதன் பேரில் பொதுமக்கள் இது குறித்து அச்சப்பட தேவையில்லை. எனவே, வெப்ப அலையின் தாக்கத்திலிருந்து தங்களை காத்துக்கொள்ள வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.

அனல் காற்று வீசும் காலங்களில் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு குறிப்புகள்:-

பொதுமக்கள் குறிப்பாக நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் அத்தியாவசிய தேவைகள் தவிர மற்ற நேரத்தில் வெளியில் செல்வதையும், அதிகளவில் களைப்படைய வைக்கும் பணிகளை செய்வதையும் தவிர்க்கவும். உடலின் நீர்ச்சத்து குறையாமல் பராமரிக்கவும், தாகம் எடுக்காவிடிலும் கூட தேவையான அளவு தண்ணீர் அருந்த வேண்டும்.

ஓ.ஆர்.எஸ். (Oral Rehydration Solution)) வீட்டில் தயாரித்த நீர்மோர், லஸ்ஸி, புளித்த சோற்று நீர், எலுமிச்சைச் சாறு போன்ற பானங்களைப் பருகி நீரிழப்பைத் தவிர்க்கவும். வெளிர் நிறமுள்ள, காற்றோட்டமான பருத்தி ஆடைகளை அணியவும். தவிர்க்க இயலாத நிலையில் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது குடிநீர் எடுத்து செல்வதுடன், தலைக்கு தொப்பி அல்லது குடையின் பாதுகாப்புடன் செல்லவும். மேலும், கட்டாயம் காலணியை அணிந்து செல்லவும். வெயிலினால் சோர்வு / உடல்நலக்குறைவு ஏற்படும் பட்சத்தில் அருகிலுள்ள அரசு ஆரம்ப சுகாதார மையங்கள்/ அரசு மருத்துவமனைகளை அணுகவும்.

முக்கியமாக குழந்தைகளை வெயில் காலங்களில் கார் போன்ற வாகனங்களில் தனியே விட்டுச்செல்லக்கூடாது. அடைக்கப்பட்ட வாகனங்களில் வெப்பம் அதிகமாகி, குழந்தைகள் உயிருக்கு ஆபத்தை விளைவிக்ககூடும். குழந்தைகளுக்கான வெப்ப தொடர்பான நோய்களை கண்டறிய சிறுநீரை சோதித்துப்பார்க்கவும், மஞ்சள் நிறமுள்ள சிறுநீர் நீரிழப்பை குறிக்கலாம். இதனை தவிர்க்க குடிநீர் மற்றும் இளநீரை பருக கொடுக்கவும். முதியவர்கள் வெப்ப அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாகத் தோன்றினால், அவர்களின் வெப்பத்தை தணிக்க ஈரமான துண்டுகளால் கழுத்து மற்றும் கைகளில் துடைக்க வேண்டும் மற்றும் குளிர்ந்த நீரில் குளிக்க வைக்க வேண்டும்.

போதிய இடைவேளையில் குடிநீர் அருந்துவதை உறுதி செய்துகொள்ள வேண்டும். கால்நடைகளை நிழலான இடங்களில் கட்டி வைப்பதோடு அவற்றிற்கு அவசியமாக போதுமான தண்ணீர் வழங்கிட வேண்டும். செல்லப்பிராணிகளை வெயில் காலங்களில் வாகனங்களில் தனியே விட்டுச்செல்லக்கூடாது. மேலும், பருவநிலை மாற்றங்களில் இந்தாண்டு கோடை வெயிலின் வெப்பம் துவக்கத்திலேயே அதிகமாக உள்ளதால் மாடி விடுகளிலும், கூரை வீடுகளிலும் உள்ள மின் கம்பிகள் உருகி எளிதில் தீ விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.

மேலும், விலை உயர்ந்த பொருட்கள் மற்றும் முக்கியமான ஆவணங்களை பாதுகாப்பாக வைத்திருப்பது அவசியம். எரிவாயு உருளையை பாதுகாப்பாக உபயோகித்து முடித்துவிட்டு அதனை அனைத்து வைப்பது அவசியம். எனவே, கோடை காலம் முடியும் வரை எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Updated On: 25 March 2024 12:39 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    "நினைவுகள்"மூளை கணினியின் ஞாபக மென்பொருள்..!
  2. தொழில்நுட்பம்
    வாட்ஸ்அப்பில் கடவுச்சொல் தேவையில்லை!
  3. லைஃப்ஸ்டைல்
    இதயங்கள் என்னவோ வேறு வேறுதான்..! உன்னில் நான்; என்னில் நீ..!
  4. கோவை மாநகர்
    எப்போது தேர்தல் வந்தாலும் எடப்பாடியார் முதல்வராக வருவார் : எஸ்.பி....
  5. உலகம்
    அழகென்றால் இளமை மட்டும் இல்லை: 60 வயதில் அசத்தும் வழக்கறிஞர்
  6. சினிமா
    கருவில் கரைந்த எம்.ஜி.ஆர்., குழந்தை..!
  7. நாமக்கல்
    ப.வேலூர் அருகே வாலிபர் மர்ம மரணம்! போலீசார் தீவிர விசாரணை!
  8. லைஃப்ஸ்டைல்
    அக்காவுக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்துகள்..!
  9. நாமக்கல்
    மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மைத்துனரை தாக்கிய வாலிபர் கைது..!
  10. நாமக்கல்
    ஏ.மேட்டுப்பட்டி ஸ்ரீ ராமர் கோயிலில் உழவாரப்பணிகள் துவக்க விழா..!