Begin typing your search above and press return to search.
காளிங்கராயன் கால்வாயில் துணி துவைக்க சென்ற பெண் பலி
காளிங்கராயன் கால்வாயில் துணி துவைக்க சென்ற பெண் பலியானது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
HIGHLIGHTS

மொடக்குறிச்சி காவல் நிலையம்.
ஈரோடு மரப்பாலம் கே.ஏ.எஸ் நகரைச் சேர்ந்தவர் அய்யம்மாள்(61). இவர் நேற்று பகலில் துணி துவைப்பதற்காக காளிங்கராயன் கால்வாய்க்கு சென்றவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து அறிந்த அவரது மகன் குப்புசாமி (39) அய்யம்மாளை தேடி வந்த நிலையில் இன்று அய்யம்மாளின் பிரேதம் வெண்டிபாளையம் கதவனை அருகே காளிங்கராயன் கால்வாயில் மிதந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக குப்புசாமி மொடக்குறிச்சி போலீசாரிடம் மனு அளித்துள்ளார். மனுவில் தனது தாயார் காளிங்கராயன் கால்வாயில் துணிதுவைத்தபோது தவறி விழுந்து நீரில் மூழ்கி இறந்திருக்கலாம். ஆகவே தனது தாயாரின் இறப்பில் சந்தேகமில்லை என குறிப்பிட்டுள்ளார்.இதன்பேரில் மொடக்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.