/* */

ஈரோட்டில் இன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரசாரம்

திமுக இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் இன்று (7ம் தேதி) ஈரோட்டில் திமுக வேட்பாளர் பிரகாசை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.

HIGHLIGHTS

ஈரோட்டில் இன்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரசாரம்
X

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.

திமுக இளைஞரணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் இன்று (7ம் தேதி) ஈரோட்டில் திமுக வேட்பாளர் பிரகாசை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.

திமுக இளைஞரணி செயலாளரும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் நாடாளுமன்றத் தேர்தலையொட்டி தமிழ்நாடு முழுவதும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றார்.

இந்நிலையில் ஈரோடு நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கே.இ.பிரகாசை ஆதரித்து இன்று (7ம் தேதி) ஞாயிற்றுக்கிழமை மாலை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.

ஈரோடு நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்பட்ட குமாரபாளையம் பழைய முருகன் தியேட்டர் அருகில் மாலை 4.30 மணிக்கும், ஈரோடு - பவானி சாலையில் உள்ள பி.பெ. அக்ரஹாரம் அன்னை சத்யா நகரில் மாலை 5.30 மணிக்கும் நடைபெற உள்ள பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச உள்ளார்.

கூட்டத்தில் திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள், இளைஞரணியினர் கலந்து கொள்ள உள்ளனர்.

Updated On: 7 April 2024 2:30 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. நீலகிரி
    கோடை சீசன் துவக்கம். நீலகிரியில் போக்குவரத்து மாற்றம்!
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. மாதவரம்
    கார் ஓட்டுநரிடம் கத்தியைக் காட்டி பணம் பறித்த மூவர் கைது
  5. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. ஆரணி
    திருவண்ணாமலை மாவட்டத்தில் மே தின கொண்டாட்டங்கள்
  7. ஈரோடு
    கோடை வெயில்: ஈரோட்டில் ஒரு எலுமிச்சை பழம் ரூ.25-க்கு விற்பனை
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தொமுச சார்பில் மாபெரும் மே தின ஊர்வலம்
  9. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 46 கன அடியாக சரிவு
  10. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 27 கன அடியாக சரிவு