/* */

அந்தியூர் பகுதியில் பொங்கல் பானை தயாரிக்கும் பணி தீவிரம்

அந்தியூர் பகுதியில் பொங்கல் பானைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

HIGHLIGHTS

அந்தியூர் பகுதியில் பொங்கல் பானை தயாரிக்கும் பணி தீவிரம்
X
தயார் நிலையில் உள்ள பொங்கல் பானைகள்.

பொங்கல் பண்டிகை நெருங்கி வருவதையொட்டி, ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியிலுள்ள, 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பானை மற்றும் கால்நடை உருவத்திலான பொம்மைகள் தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். இதேபோல், வெள்ளித்திருப்பூர் ஆலாம்பாளையம். எண்ணமங்கலம் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட ஊர்களில் மண்பாண்ட தொழிலாளர்கள் உள்ளனர். தை பொங்கலை முன்னிட்டு, பொங்கல் பானைகள் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இங்கு தயாரிக்கப்படும் பொங்கல் பானைகளை அந்தியூர் சுற்று வட்டார பகுதிகள் மட்டுமின்றி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பொதுமக்கள் பானைகளை வாங்கிச் செல்கின்றனர்.

இதுகுறித்து பானை வியாபாரிகள் கூறியதாவது: பொங்கல் பண்டிகைக்கு மட்டுமின்றி, ஆண்டு முழுவதும் மண் பானை தயாரித்து விற்கிறோம். ஆனால், பொங்கல் பண்டிகைக்குதான், வியாபாரம் அதிகம் நடக்கும். இதனால் நாங்களும் வழக்கத்தை விட, அதிக அளவில் தயாரிக்கிறோம். ரகம் வாரியாக பானைகள் உள்ளன. கலர் பூசிய பானைகள், பூசாத பானைகளை, மக்கள் விரும்பி வாங்கி செல்கின்றனர். அரைப்படி முதல், ஐந்து படி வேகக்கூடிய பானைகள் உள்ளன. ஒரு பானை, 50 ரூபாய் முதல், 500 ரூபாய் வரை விற்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Updated On: 1 Jan 2022 10:15 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    திருவண்ணாமலை To சென்னை கட்டணம் வெறும் ரூ.50 மட்டுமே!
  2. ஈரோடு
    அந்தியூர் அருகே வேலை வாங்கித் தருவதாக மோசடி: தலைமறைவு நபர் 2...
  3. ஈரோடு
    ஈரோட்டில் மோடியின் பேச்சை கண்டித்து மகிளா காங்கிரசார் தாலி ஏந்தி...
  4. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மகர ராசிக்கு எப்படி இருக்கும்?
  5. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: தனுசு ராசிக்கு எப்படி இருக்கும்?
  6. லைஃப்ஸ்டைல்
    தர்பூசணி, ஏன் அளவோடு உண்ணவேண்டும்? தெரிஞ்சுக்கங்க..!
  7. லைஃப்ஸ்டைல்
    காதல் கடந்து போகாது...! கூடவே பயணிக்கும்..!
  8. லைஃப்ஸ்டைல்
    இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய்..அன்பே..அன்பே..!
  9. குமாரபாளையம்
    குமாரபாளையம் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  10. காஞ்சிபுரம்
    மர்மமான முறையில் 9 கால்நடைகள் உயிரிழப்பு ?