/* */

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை ரூ.5.61 கோடி பணம், பொருட்கள் பறிமுதல்

ஈரோடு மாவட்டத்தில் தோ்தல் பறக்கும் படையினா் நடத்திய சோதனையில் இதுவரை ரூ.5.61 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டத்தில் இதுவரை ரூ.5.61 கோடி பணம், பொருட்கள் பறிமுதல்
X

தேர்தல் பறக்கும் படையினர் வாகனம்.

ஈரோடு மாவட்டத்தில் தோ்தல் பறக்கும் படையினா் நடத்திய சோதனையில் இதுவரை ரூ.5.61 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் நாடாளுமன்றத் தோ்தல் நாளை (19ம் தேதி) வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது. அதன்படி, தோ்தலில் வாக்காளா்களுக்கு பணம் பரிசுப் பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் பறக்கும் படையினா் நிலைக் கண்காணிப்பு குழுவினா் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா். ஈரோடு மாவட்டத்திலும் இரவு, பகல் என சுழற்சி முறையில் தோ்தல் பறக்கும் படையினா் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு ரூ.50 ஆயிரத்துக்கும் மேல் உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்படும் பணம், பொருட்களைப் பறிமுதல் செய்து வருகின்றனா்.

அதன்படி, மாவட்டத்தில் கடந்த மார்ச் 16ம் தேதி முதல் இன்று (ஏப்ரல் 18ம் தேதி) வியாழக்கிழமை இன்று காலை வரை ஈரோடு கிழக்கு தொகுதியில் ரூ.90 லட்சத்து 26 ஆயிரத்து 707ம், ஈரோடு மேற்கு தொகுதியில் ரூ.94 லட்சத்து 81 ஆயிரத்து 890ம், மொடக்குறிச்சி தொகுதியில் ரூ.9 லட்சத்து 85 ஆயிரத்து 870ம், பெருந்துறை தொகுதியில் ரூ.44 லட்சத்து 35 ஆயிரத்து 970ம், பவானி தொகுதியில் ரூ.31 லட்சத்து 76 ஆயிரத்து 400ம், அந்தியூர் தொகுதியில் ரூ.13 லட்சத்து 50 ஆயிரத்து 250ம், கோபி தொகுதியில் ரூ.51 லட்சத்து 75 ஆயிரத்து 050ம், பவானிசாகர் தொகுதியில் ரூ.1 கோடியே 3 லட்சத்து 42 ஆயிரத்து 406ம் என 8 சட்டமன்ற தொகுதிகளில் 318 பேரிடம் ரொக்கப் பணமாக மொத்தம் ரூ.4 கோடியே 39 லட்சத்து 74 ஆயிரத்து 543 மற்றும் பொருட்களாக ரூ.1 கோடியே 21 லட்சத்து 31 ஆயிரத்து 996 மதிப்பில் பறிமுதல் செய்துள்ளனர்.

இதில், 279 பேர் ரொக்கப் பணம் ரூ.3 கோடியே 26 லட்சத்து 39 ஆயிரத்து 203 ரூபாய் உரிய ஆவணங்களை காண்பித்து பெற்று சென்றனர். மீதமுள்ள 39 பேரின் ரூ.1 கோடியே 13 லட்சத்து 35 ஆயிரத்து 340 ரூபாய் மாவட்ட கருவூலத்தில் ஒப்படைத்துள்ளனர். முறையான ஆவணங்களை அளித்தால், பறிமுதல் செய்யப்பட்ட பணம் மீண்டும் வழங்கப்படும் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 18 April 2024 10:36 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மகர ராசிக்கு எப்படி இருக்கும்?
  2. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: தனுசு ராசிக்கு எப்படி இருக்கும்?
  3. லைஃப்ஸ்டைல்
    தர்பூசணி, ஏன் அளவோடு உண்ணவேண்டும்? தெரிஞ்சுக்கங்க..!
  4. லைஃப்ஸ்டைல்
    காதல் கடந்து போகாது...! கூடவே பயணிக்கும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய்..அன்பே..அன்பே..!
  6. குமாரபாளையம்
    குமாரபாளையம் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  7. காஞ்சிபுரம்
    மர்மமான முறையில் 9 கால்நடைகள் உயிரிழப்பு ?
  8. வீடியோ
    ஜூன் மாதம் நடவிருக்கும் அதிரடி | அடுத்தடுத்து சிக்கும் திமுக...
  9. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: விருச்சிக ராசிக்கு எப்படி இருக்கும்?
  10. குமாரபாளையம்
    வக்கீல்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு..!