/* */

கோபி, அந்தியூர் கூட்டுறவு சங்கங்களில் ரூ.13 லட்சத்துக்கு வாழைத்தார்கள் ஏலம்

கோபி, அந்தியூர் கூட்டுறவு சங்கங்களில் நேற்று மாலை நடைபெற்ற ஏலத்தில் ரூ.13 லட்சத்துக்கு வாழைத்தார்கள் ஏலம் போனது.

HIGHLIGHTS

கோபி, அந்தியூர் கூட்டுறவு சங்கங்களில் ரூ.13 லட்சத்துக்கு வாழைத்தார்கள் ஏலம்
X

பைல் படம்

கோபி வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நேற்று நடைபெற்ற வாழைத்தார் ஏலத்தில் 8 லட்சத்து 64 ஆயிரம் ரூபாய்க்கு வாழைத்தார் ஏலம் போனதாக சங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் மொடச்சூர் சாலையில் செயல்பட்டு வரும் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நேற்று நடந்த வாழைத்தார் ஏலத்தில் கோபி மட்டுமன்றி நம்பியூர், பங்களாபுதூர், டி.என்.பாளையம், அத்தாணி, கள்ளிப்பட்டி, கணக்கம்பாளையம், துறையம்பாளையம், கலிங்கியம், குருமந்தூர் உள்ளிட்ட பகுதியில் இருந்து 100க்கும் மேற்பட்ட விவசாயிகளும், பல்வேறு மாவட்டங்களில் இருந்து 50க்கும் மேற்பட்ட வியாபாரிகளும் கலந்து கொண்டனர்.

ஏலத்துக்கு 5 ஆயிரத்து 820 வாழைத்தார் வரத்து இருந்த நிலையில், கடந்த வாரம் 38 ரூபாய்க்கு விலை போன கதளி இந்த வாரம் ஒரு கிலோ 36 ரூபாயாக குறைந்தது. கடந்த வாரம் 35 ரூபா யாக இருந்த நேந்திரன் ஒரு கிலோ 38 ரூபாயாக உயர்ந்தது. அதே போன்று பூவன் தார் ஒன்று 430 ரூபாய், தேன் வாழை 510 ரூபாய், செவ்வாழை 540 ரூபாய், பச்சைநாடன் 300 ரூபாய், ரொபஸ்டா 310 ரூபாய், ரஸ்தாளி 460 ரூபாய். மொந்தன் 290 ரூபாய் வரையிலும் விலை போனது. நேற்று நடைபெற்ற ஏலத்தில் மொத்தம் 8 லட்சத்து 64 ஆயிரம் ரூபாய்க்கு விலை போனதாக சங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதேபோல், அந்தியூர் புதுப்பாளையம் வாழைத்தார் ஏல நிலையத்தில் நேற்று நடைபெற்ற ஏலத்தில் 4 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய்க்கு வாழைத்தார்கள் விற்பனை செய்யப்பட்டது. ஈரோடு மாவட்டம் அந்தியூர் புதுப்பாளையம் வாழைத்தார் ஏல நிலையத்தில் நேற்று மாலை நடைபெற்ற ஏலத்தில், அந்தியூர், அத்தாணி , அம்மாபேட்டை, வெள்ளித்திருப்பூர், பர்கூர், ஆப்பக்கூடல் உள்ளிட்ட பகுதியில் இருந்து 50க்கும் மேற்பட்ட விவசாயிகளும், பல்வேறு மாவட்டங்களில் இருந்து 30க்கும் மேற்பட்ட வியாபாரிகளும் கலந்து கொண்டனர்.

இதில், கதலி ரக வாழை ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், நேந்திரம் ஒரு கிலோ 38 ரூபாய்க்கும், செவ்வாழை தார் ஒன்று 480 ரூபாய்க்கும், பூவன் தார் ஒன்று 300 ரூபாய்க்கும், மொந்தன் தார் ஒன்று 370 ரூபாய்க்கும், ரஸ்தாளி தார் ஒன்று 570 ரூபாய்க்கும் , தேன் வாழை தார் ஒன்று 420 ரூபாய்க்கும், ரொப்பர் தார் ஒன்று 570 ரூபாய்க்கும் விற்பனையானது.மொத்தம் 3,087 வாழைத்தார்கள் கொண்டு வரப்பட்ட நிலையில், 4 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

மொத்தம் நேற்று அந்தியூர் புதுப்பாளையம் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம், கோபி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களில் 8,907 வாழைத்தார்கள் ரூ.13 லட்சத்துக்கு விற்பனை செய்யப்பட்டன.

Updated On: 9 Oct 2022 12:45 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    ராஜவாய்க்காலில் திடீரென தண்ணீர் நிறுத்தம்; விவசாயிகள் கடும் பாதிப்பு
  2. திருவண்ணாமலை
    அருணாச்சலேஸ்வரர் கோயில் ராஜகோபுரம் முன்பு வணிக வளாக வழக்கு, சிறப்பு...
  3. நாமக்கல்
    பிரதமர் மோடி தேர்தல் பிரச்சார பேச்சைக் கண்டித்து மகளிர் காங்கிரசார்...
  4. திருவண்ணாமலை
    அருணாசலேஸ்வரா் கோவில் உண்டியல் காணிக்கை ரூ.2.23 கோடி
  5. நாமக்கல்
    நாமக்கல் அருகே பட்டப் பகலில் வீட்டுக்குள் புகுந்து ரூ. 17 லட்சம்...
  6. தமிழ்நாடு
    திருவண்ணாமலை To சென்னை கட்டணம் வெறும் ரூ.50 மட்டுமே!
  7. ஈரோடு
    அந்தியூர் அருகே வேலை வாங்கித் தருவதாக மோசடி: தலைமறைவு நபர் 2...
  8. ஈரோடு
    அத்தாணி அருகே தீர்த்தம் எடுக்க வந்த போது பவானி ஆற்றில் மூழ்கி இருவர்...
  9. ஈரோடு
    மொடக்குறிச்சி அருகே ஆற்றில் மூழ்கி இரு மாணவர்கள் உயிரிழப்பு
  10. ஈரோடு
    ஈரோட்டில் மோடியின் பேச்சை கண்டித்து மகிளா காங்கிரசார் தாலி ஏந்தி...