/* */

ஈரோட்டில் இரவு நேர ஊரடங்கை மீறியதாக ஒரே நாளில் 50 வழக்குகள் பதிவு

பொதுமக்கள் இரவு நேர ஊரடங்கை முழுமையாக கடைபிடிக்க வேண்டும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

HIGHLIGHTS

ஈரோட்டில் இரவு நேர ஊரடங்கை மீறியதாக ஒரே நாளில்  50 வழக்குகள் பதிவு
X

தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் வேகம் எடுத்துள்ளது. தினசரி பாதிப்பு 11 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. தொடர்ந்து சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதையடுத்து கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தி உள்ளது. அதன்படி இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் என்றும்,ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் எனவும் அறிவித்திருந்தது.

எனினும் மருத்துவம், அவசர தேவைக்கு வழக்கம்போல் வாகனங்கள் இயக்கத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இரவு நேர ஊரடங்கு நேற்று இரவு முதல் அமலுக்கு வந்தது. ஈரோடு மாவட்டத்தில் இரவு நேர ஊரடங்கை மதிக்காமல் சுற்றுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை எச்சரிக்கை விடுத்திருந்தார்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள இரண்டு மாநில எல்லை சோதனை சாவடிகளிலும், 12 மாவட்ட சோதனைச் சாவடிகளிலும் கூடுதலாக போலீசார் நிறுத்தப்பட்டு வாகனங்களை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இரவு நேர ஊரடங்கு மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர். நேற்று இரவு ஈரோடு மாநகர் பகுதியான பன்னீர்செல்வம் பார்க்க, காளைமாட்டு சிலை, பஸ் நிலையம். வீரப்பன்சத்திரம் கருங்கல்பாளையம், இதேபோல் கோவில் பெருந்துறை, அந்தியூர், சத்தியமங்கலம், மொடக்குறிச்சி, கொடுமுடி உள்பட மாவட்டம் முழுவதும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.

ஈரோடு மாநகர் பகுதியில் இரவு நேர ஊரடங்கு மீறியதாக 6 வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளன. இரவு 10 மணிக்கு மேல் இருசக்கர வாகனங்களில் தேவையில்லாமல் வெளியே சுற்றிய 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதைப்போல் வீரப்பன்சத்திரம் பகுதியில் இரவு 10 மணிக்கு மேல் செயல்பட்ட இரண்டு கடைகளின் உரிமையாளர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. அதைப்போல் காரில் ஊர் சுற்றிய ஒருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதேபோல் ஈரோடு மாவட்டம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு மீறி இருசக்கர வாகனங்களில் சுற்றியது, கடைகளைத் திறந்து வைத்திருந்தது என ஒரே நாளில் 50 வழக்கு பதிவு செய்யப்பட்டன. பொதுமக்கள் இரவு நேர ஊரடங்கு முழுமையாக கடைபிடிக்க வேண்டும் இல்லையென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 21 April 2021 11:10 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மகர ராசிக்கு எப்படி இருக்கும்?
  2. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: தனுசு ராசிக்கு எப்படி இருக்கும்?
  3. லைஃப்ஸ்டைல்
    தர்பூசணி, ஏன் அளவோடு உண்ணவேண்டும்? தெரிஞ்சுக்கங்க..!
  4. லைஃப்ஸ்டைல்
    காதல் கடந்து போகாது...! கூடவே பயணிக்கும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய்..அன்பே..அன்பே..!
  6. குமாரபாளையம்
    குமாரபாளையம் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  7. காஞ்சிபுரம்
    மர்மமான முறையில் 9 கால்நடைகள் உயிரிழப்பு ?
  8. வீடியோ
    ஜூன் மாதம் நடவிருக்கும் அதிரடி | அடுத்தடுத்து சிக்கும் திமுக...
  9. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: விருச்சிக ராசிக்கு எப்படி இருக்கும்?
  10. குமாரபாளையம்
    வக்கீல்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு..!