/* */

வேளாண் சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு: ஈரோட்டில் ரயிலை மறிக்க முயற்சி

வேளாண் சட்ட மசோதாவை கண்டித்து, ஈரோட்டில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற 300க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

வேளாண் சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு: ஈரோட்டில் ரயிலை மறிக்க முயற்சி
X

 ஈரோட்டில்,  தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் விவசாய சங்கத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

வேளாண் சட்ட மசோதாவை கண்டித்து, டெல்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக, இன்று நாடு முழுவதும் கடையடைப்பு மற்றும் போராட்டம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி தமிழகம் முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் விவசாய சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக, ஈரோட்டில் தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் விவசாய சங்கத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காளைமாட்டுச்சிலை அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில், விவசாயிகளை பாதிக்கும் வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தை தொடர்ந்து, ரயில் நிலையத்தை நோக்கி பேரணியாக சென்றனர். இதையடுத்து ரயில் நிலையம் முன்பாக , ஆர்ப்பாட்டக்காரர்களை, போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதேபோல் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில், ஈரோடு பஸ் ஸ்டாண்ட் அருகே சாலை மறியல் போராட்டம் நடந்தது. இதில் ஈடுபட்ட 12பேரை போலீசார் கைது செய்தனர்.

Updated On: 27 Sep 2021 6:30 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    கருப்பசாமி முன்பே உருவான சனாதனம் ! காந்தி சொன்ன உறுதிமொழி ! #gandhi...
  2. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் ஆசிரியரை நினைவூட்டும் இனிய மேற்கோள்கள்
  3. இந்தியா
    நோட்டா அதிக வாக்குகள் பெற்றால் தேர்தல் ரத்தா? விளக்கமளிக்க...
  4. கல்வி
    அள்ளிப் பருக தெள்ளத் தெளிதேன் திருக்குறள்..!
  5. ஈரோடு
    சங்கமேஸ்வரர் கோவிலுக்கு தென்னை நார் விரிப்பு வழங்கிய ஜவுளி நிறுவனம்
  6. விழுப்புரம்
    முதலமைச்சர் மாநில இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்! விழுப்புரம்...
  7. லைஃப்ஸ்டைல்
    எப்படி குடை பிடிப்பேன்..? மழை..மழை, கண்ணீர்..!
  8. மாதவரம்
    கோயம்பேட்டில் லாரி கடத்தல்: 2 மணி நேரத்தில் லாரியை மீட்ட போலீசார்
  9. ஈரோடு
    ஈரோடு நந்தா ஆயுர்வேத மருத்துவ கல்லூரியில் உலக பூமி தின கருத்தரங்கு
  10. ஈரோடு
    ஈரோட்டில் கோடை கால விளையாட்டுப் பயிற்சி: நாளை மறுநாள் துவக்கம்