/* */

ஈரோடு பஸ் நிலைய விரிவாக்கப் பணி 10 நாட்களில் தொடக்கம் : மாநகராட்சி ஆணையர் தகவல்

ஈரோடு பஸ் நிலைய விரிவாக்கப் பணி இன்னும் 10 நாட்களில் தொடங்கப்படும் என்று மாநகராட்சி ஆணையர் இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

ஈரோடு பஸ் நிலைய விரிவாக்கப் பணி 10 நாட்களில் தொடக்கம் : மாநகராட்சி ஆணையர் தகவல்
X

பைல் படம்

ஈரோடு மாவட்டத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக சிறிது காலம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பணிகள் மீண்டும் வேகம் எடுத்துள்ளன.

இதன்படி ஈரோடு பஸ் நிலையம் ரூ. 40 கோடி மதிப்பில் விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது. பஸ் நிலையத்தில் உள்ள பழைய கட்டிடங்கள் இடிக்கப்பட்டு புதிய கட்டிடங்கள் கட்ட முடிவு செய்யப்பட்டது.

மேலும் பஸ் நிலையத்தில் உள்ள 3 ரேக்குகள் பழுதாகி உள்ள தூண்கள் மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளது. தரைத்தளம், வெயிட்டிங் ரூம், பாலூட்டும் தாய்மார்களுக்கு தனி அறை, நவீன கழிப்பறைகள் ஆகியவையும் கட்டப்படுகிறது.

கடந்த 4 மாதங்களுக்கு முன்பு இதற்கான பூமி பூஜை நடந்தது. பின்னர் முதற்கட்டமாக நாமக்கல் ரேக்குகள் பழுதாகி இருந்ததால் மக்கள் பாதுகாப்பு கருதி அந்தப் பகுதி மட்டும் அடைக்கப்பட்டு இருந்தன.

பின்னர் கொரோனா தாக்கம் ஏற்பட்டு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது பணிகள் அனைத்தும் நிறுத்தப்பட்டு இருந்தது.தற்போது இயல்பு நிலை மெல்ல மெல்ல திரும்பி வருவதால் பணிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஈரோடு மாநகராட்சி ஆணையர் இளங்கோவன் கூறும் போது, ஈரோடு மாநகர் பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நவீன கட்டிடங்கள், கனி மார்க்கெட் பகுதியில் ஒருங்கிணைந்த ஜவுளி வளாகம், பூங்காக்கள் உட்பட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அதைபோல் பஸ் நிலையம் ரூ .40 கோடி மதிப்பில் விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதற்கான பணி தொடங்கிய நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக நிறுத்தப்பட்டது. தற்போது மீண்டும் இயல்பு நிலைக்கு இறங்கி விட்டதால் இன்னும் 10 நாட்களில் இந்த பணி தொடங்கி விடும் என்று எதிர்பார்க்கிறோம் என்றார்.

Updated On: 14 July 2021 6:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    என் இதய மாளிகையின் ராணி..! என்னை ஆட்சிபுரிபவள்..!
  2. பட்டுக்கோட்டை
    வேளாண் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்க..! ஜோரான மகசூலை அள்ளுங்க..!
  3. குமாரபாளையம்
    ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு பாராட்டு..!
  4. குமாரபாளையம்
    பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா!
  5. வீடியோ
    மத்திய அரசின் ஐடி பாதுகாப்பு சட்டம் | இந்தியாவில் Whatsapp சேவை...
  6. குமாரபாளையம்
    கிணற்றில் விழுந்த பசுவை மீட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர்!
  7. காஞ்சிபுரம்
    பாரதியார் உண்டு உறைவிட பள்ளி மாணவிகளுக்கு பட்டமளிப்பு விழா..!
  8. காஞ்சிபுரம்
    மருத்துவ மாணவர்களுக்கு புற்று நோயியல் கல்வி மற்றும் விழிப்புணர்வு...
  9. லைஃப்ஸ்டைல்
    நீ சென்ற பாதைநோக்கிய பயணத்தில் இருக்கிறேன் நான்..!
  10. சினிமா
    யாரிந்த அக்ஷய் கமல்..? 'குக் வித் கோமாளி' சீசன் 5 போட்டியாளர்..!