/* */

அரசு அலுவலகங்களில் லஞ்ச ஊழல் குறித்து மக்கள் தைரியமாக புகார் செய்யலாம்

அரசு அலுவலகங்களில் லஞ்சம் குறித்து மக்கள் தைரியமாக புகார் செய்யலாம் என பொதுக் கணக்குக் குழு தலைவர் பெருந்தகை கூறினார்

HIGHLIGHTS

அரசு அலுவலகங்களில் லஞ்ச ஊழல் குறித்து மக்கள் தைரியமாக புகார் செய்யலாம்
X

அரசு அலுவலகங்களில் லஞ்ச ஊழல் குறித்து மக்கள் தைரியமாக புகார் செய்யலாம் அரசின் பொதுக் கணக்குக் குழு தலைவர் செல்வப்பெருந்தகை கூறினார்.

அரசு அலுவலகங்களில் லஞ்ச ஊழல் குறித்து பொதுமக்கள் தைரியமாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் பொது கணக்கு குழு சட்டமன்ற உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் கூறலாம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டமன்ற பொது கணக்கு குழு தலைவர் மாற்றம் சட்டமன்ற காங்கிரஸ் எதிர்க்கட்சித் தலைவர்செல்வப்பெருந்தகை கூறினார்.

ஈரோடு நகரில் பல துறை சார்ந்த ஆய்வை மேற்கொண்டார். பின்னர் அவர் ஈரோடு தாலுகா அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது: இந்த குழு பட்டா மாறுதல் முதியோர் ஓய்வு ஊதியம் குறித்து சிறப்பு கவனம் செலுத்தி ஆய்வு செய்கிறது. அது மட்டும் அல்லாமல் மத்திய தணிக்கைக் குழு சுட்டிக்காட்டியுள்ள சில குறைபாடுகள் குறித்து ஆய்வு நடத்துகிறது. தாலுகா அலுவலகங்களில் பட்டா மாறுதல் புதியபட்டா பெறுதல் ஓய்வூதியம் குறித்த மனுக்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது சம்பந்தமாக மாவட்ட ஆட்சியரின் கேட்டபோது ஒவ்வொரு திங்கள்கிழமையும் மனுநீதி நாள் நடைபெறுகிறது.

அங்கு பெறப்படும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது அதுமட்டுமல்லாமல் முதலமைச்சர் தனிப்பிரிவு அனுப்பப்படும் மனுக்கள் மீது சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது சமீபத்தில் ஓய்வூதியம் பெறும் நபர்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு தகுதியற்ற நபர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர் .மீண்டும் தகுதியான நபர் கணக்கெடுக்கப்பட்டு புதிதாக 6 ஆயிரம் பேர் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று கூறினார். நாங்களும் உரிய தகுதியுள்ள அனைத்து பயனாளிகளுக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டோம்.

வருவாய் துறையில் பட்டா மாறுதல் மற்றும் இதர சான்றிதழ்கள் பெற லஞ்சம் கேட்கப்பட்டால் மக்கள் தைரியமாக புகார் செய்யலாம். அப்போதுதான் லஞ்ச ஊழல் ஒழியும். ஈரோடு நகரில் நீர்நிலை புறம்போக்கு பகுதியில் குடியிருந்தசுமார் 320 குடும்பங்களுக்கு காலி செய்ய நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சட்டமன்றத்தில் 234 உறுப்பினர்களும் இவ்வாறு ஏற்கெனவே ஐம்பது நூறு ஆண்டுகளாக குடியிருந்தவர்கள் காலி செய்யும் போது உரிய கவனம் செலுத்த வேண்டும்.

நூறாண்டுகளுக்கு முன்பு ஒரு இடத்தில் 30 அடி ஆழத்தில் தண்ணீர் கிடைத்தது என்றால் தற்போது 300 அடி ஆழத்தில் தண்ணீர் கிடைக்கிறது எனவே அதே நீர்நிலை புறம்போக்கு என்று வைத்துக் கொண்டிருப்பதில் பிரயோஜனமில்லை அதை மாற்றி மறு ஆய்வு செய்து நீர்நிலை பாதிப்பில்லாத பகுதியில் குடியிருந்து வருபவர்களுக்கு கருணை காட்ட வேண்டும்.நீதிமன்றம் நீர்நிலை புறம்போக்கு பகுதிகளில் குடியிருப்புகளை அப்புறப்படுத்த சொல்லியுள்ளது.

இவ்வாறு குடியிருப்பவர்கள் வெள்ளப்பெருக்கு அப்பகுதியில் ஏற்பட்டால் அவர்களை அப்புறப்படுத்தலாம். ஆனால் எந்த பாதிப்பும் இல்லாமல் வாழ்ந்து வருபவர்களிடம் வருபவர்களிடம் கருணை காட்ட வேண்டும். ஈரோடு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ்கனிமார்க்கெட்டில் ஜவுளி வணிக வளாகம் கட்டப்பட்டுள்ளது. ஒரு சில வாரங்களில் அங்குள்ள கடைகள் அவர்களுக்கு தரப்பட உள்ளது. ஏற்கெனவே அப்பகுதியில் கடை வைத்திருந்தவர்களுக்கு முன்னுரிமை அளித்து வழங்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டுள்ளோம்.

ஏனென்றால் வெளியிலிருந்து வந்து அதிக விலையில் கடைகளை ஏலத்தில் கேட்பவர்களுக்கு ஒதுக்கீடு செய்தால் உள்ளூர் வியாபாரிகள் பாதிக்கப்படுவார்கள். இது குறித்து பரிந்துரை நாங்கள் அரசுக்கு அளிக்க உள்ளோம். ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை சென்னை, தஞ்சாவூர் போன்ற பகுதிகளில் ஆய்வு நடத்தி குழு சில குறைகளை கண்டறிந்துள்ளது. அதேபோன்று ஈரோட்டிலும் குறைகள் கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்க அரசுக்கு பரிந்துரை செய்வோம். குழு உறுப்பினர்கள் ராஜா முத்துமாரி, முத்து சரஸ்வதி மற்றும் ஈரோடு எம்எல்ஏ திருமகன் அந்தியூர் எம்எல்ஏ வெங்கடாஜலம் கலெக்டர் கிருஷ்ணன் உண்ணி உடனிருந்தனர்.

Updated On: 9 Jun 2022 7:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    'அன்பு' வாழும் 'இல்லம்', கூட்டுக்குடும்பம்..!
  2. சேலம்
    மரத்தில் இருந்து தவறி விழுந்து மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல்...
  3. லைஃப்ஸ்டைல்
    மரணம், இயற்கையின் நீள்துயில்..!
  4. நாமக்கல்
    நாமக்கல் டிரினிடி மெட்ரிக் மேல்நிலை பள்ளி, பிளஸ் 2 தேர்வில் சாதனை..!
  5. கோவை மாநகர்
    சுற்றுலா இடங்களில் மதுவுக்கு தடை விதிக்க வேண்டும் : வானதி சீனிவாசன்...
  6. ஈரோடு
    அந்தியூர் அருகே தண்ணீர் தேடி ஊருக்குள் வந்த காட்டு யானை..!
  7. ஈரோடு
    சத்தியமங்கலம் அருகே தனியார் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து
  8. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை எனும் கவசம் அணியுங்கள்..! வாழ்க்கை வெற்றியாக அமையும்..!
  9. லைஃப்ஸ்டைல்
    துரோகிகளை மட்டும் மன்னித்துவிடாதீர்கள்..!
  10. வீடியோ
    🔴LIVE : #vijay -ன் அரசியல் பிரவேசம் ! பகிர் கிளப்பிய #raghavalawrence...