/* */

ஈரோட்டை குளிர்வித்த மழையால் மக்கள் மகிழ்ச்சி

ஈரோட்டில் நேற்று காலையில் இருந்தே வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. அதிகபட்சமாக 98 டிகிரி வரை வெயில் வாட்டியது

HIGHLIGHTS

ஈரோட்டை குளிர்வித்த மழையால் மக்கள் மகிழ்ச்சி
X

பைல் படம்

தமிழகத்தில் ஈரோடு உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது. ஈரோட்டில் நேற்று காலையில் இருந்தே வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. அதிகபட்சமாக 98 டிகிரி வரை வெயில் வாட்டி வதைத்தது. சுட்டெரித்த வெயில் காரணமாக பொதுமக்கள் சிரமம் அடைந்தனர்.

இந்தநிலையில் நேற்று மாலையில் வானில் கருமேகங்கள் திரண்டன. மாலை 5. 30 மணி அளவில் பலத்த காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது. சுமார் அரை மணிநேரம் பலத்த மழை கொட்டியது. அதன்பிறகு சுமார் 2 மணி நேரம் மழை பெய்து கொண்டே இருந்தது. இந்த மழை காரணமாக ஈரோட்டில் சாலையோரங்களில் தண்ணீர் பெருக்கெடுத்தது. ஈரோடு மணிக்கூண்டு நேதாஜி ரோடு பகுதியில் சாக்கடை கழிவுநீருடன் கலந்து மழைநீர் ஓடியது.

தனியார் நிறுவனங்கள், கடைகளில் வேலையை முடித்து விட்டு வீட்டுக்கு திரும்பியவர்கள் மழையில் நனைந்தபடி சென்றார்கள். மழையில் நனையாமல் இருக்க பலர் குடையை பிடித்தபடியும், இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் மழை கோர்ட்டு அணிந்தபடியும் சென்றனர். இரவு வரை மழை தூறி கொண்டே இருந்தது. இந்த மழை காரணமாக வெப்பம் தணிந்து ஈரோடு மாநகரமே குளிர்ந்தது. அதேசமயம் மழையால் பல்வேறு இடங்களில் மின் தடை ஏற்பட்டது. ஈரோடு பஸ்நிலையம், வீரப்பன்சத்திரம், நாராயணவலசு உள்பட பல்வேறு இடங்களில் மின் தடை ஏற்பட்டது.

Updated On: 2 May 2023 6:45 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் தூய்மை பணியில் ஈடுபட்ட அமைச்சர்
  3. செய்யாறு
    செய்யாறு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு...
  4. திருவண்ணாமலை
    கார் விபத்தில் சிக்கிய அமைச்சரின் மகன்: போலீசார் விசாரணை
  5. நாமக்கல்
    நாமக்கல்லில் இன்னுயிர் காப்போம் திட்டம்: 6,568 பேருக்கு ரூ. 4.73 கோடி...
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் இயற்கை உணவு திருவிழா
  8. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  10. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு