/* */

ஈரோடு அரசு மருத்துவமனையில் பச்சிளங் குழந்தை இறப்பு: கண்ணாடியை உடைத்த பெற்றோர்

பிறந்து 2 நாட்களான குழந்தை தவறான சிகிச்சையால் இறந்ததாக கூறி கண்ணாடி உள்ளிட்ட பொருட்களை பெற்றோர்கள் சேதப்படுத்தியதால் பரபரப்பு.

HIGHLIGHTS

ஈரோடு அரசு மருத்துவமனையில் பச்சிளங் குழந்தை இறப்பு:  கண்ணாடியை உடைத்த பெற்றோர்
X
ஈரோடு அரசு மருத்துவமனை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட உறவினர்கள்.

ஈரோடு நசியனூர் ஆட்டையாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஆனூர் சம்பத் - மங்கையர்கரசி தம்பதியினர். இதில் சம்பத்தின் மனைவி மங்கையர்கரசி நிறைமாத கர்ப்பிணியாக ஈரோடு அரசு மருத்துவமனையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குழந்தை பிறந்து இரண்டு நாட்களாகி இருந்த நிலையில், தாய் மங்கையர்கரசியிடம் இன்று காலையில் குழந்தையை பரிசோதிக்க வேண்டும் எனக் கூறி செவிலியர்கள் வாங்கி சென்று உள்ளனர். பின்னர் மங்கையர்கரசியை கருத்தடை செய்ய வேண்டும் என செவிலியர்கள் அழைத்து உள்ளனர்.

இதற்கிடையே குழந்தை வாங்கி சென்று இரண்டு மணி நேரம் கழித்து குழந்தை இறந்து விட்டதாக பெற்றோர்களிடம் செவிலியர்கள் தெரிவித்து உள்ளனர். இதனால் பதட்டம் அடைந்த குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மருத்துவர்களிடம் கேட்டதற்கு குழந்தை பால் கொடுக்கும்போத புறை ஏறி மூச்சுதிணறி இறந்ததாக தெரிவித்து உள்ளனர். எனவே இந்த குழந்தை இறப்பில் சந்தேகம் உள்ளது எனக் கூறி உறவினர்கள் மருத்துவமனையின் கதவின் கண்ணாடிகளை உடைத்து போரட்டத்தில் ஈடுபட்டதாள் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On: 21 Dec 2021 7:45 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  2. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  3. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!
  4. தமிழ்நாடு
    நேரடி நியமனத்தால் வந்த புதுசிக்கல்!
  5. திருவள்ளூர்
    நீதிமன்ற அலுவலக உதவியாளர் கன்னத்தில் அறைந்த ஜூஸ் கடை உரிமையாளர்!
  6. வீடியோ
    அரசியல் அட்வைஸ் கொடுத்த லாரன்ஸ் அம்மா | பதில் சொன்ன ராகவா மாஸ்டர் |...
  7. நாமக்கல்
    இன்று தொழிலாளர் தினத்தில் விடுமுறை அளிக்காத 61 வணிக நிறுவனங்கள் மீது...
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் ஒரே நாளில் முட்டை விலை 20 பைசா உயர்வு : ஒரு முட்டை ரூ....
  9. காஞ்சிபுரம்
    வாலாஜாபாத் அருகே பசு மாடுகள் இறந்தது தொடர்பாக ஒருவர் கைது
  10. ஈரோடு
    தோல்வி பயத்தால் ஹிட்லரின் வழியை மோடி பயன்படுத்துகிறார்: ஈரோட்டில்...