கோயில்களின் அருகே தடை செய்யப்பட்ட நெகிழி பொருள்கள் விற்பனையை தவிர்க்க ஆலோசனை

ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் நெகிழிகள் பற்றி காணொலி காட்சி மூலம் விழிப்புணர்வு, சட்ட விதிகள் விளக்கமளிக் கப்பட்டது

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
கோயில்களின் அருகே தடை செய்யப்பட்ட நெகிழி பொருள்கள் விற்பனையை தவிர்க்க ஆலோசனை
X

பைல் படம்

ஈரோடு மாவட்டத்தில் உள்ள திருக்கோவில்கள் மற்றும் வழிபாட்டு தலங்களின் அருகிலுள்ள கடைகளில்தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் உபயோகிப்பதையும் விற்பனை செய்வதையும் முற்றிலும் தவிர்ப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட சுற்று சூழல் பொறியாளர் அலுவலகம், தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரியம், பெருந்துறை-அலுவலக கூட்டரங்கில் 29.03.2023 நேற்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் ஈரோடு மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை திருக்கோவில் உதவி ஆணையர், ஈரோடு மாவட்ட பேரூராட்சிகள் உதவி இயக்குநர், திருக்கோவில் செயல் அலுவலர்கள், நகராட்சி ஆணையாளர்கள் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.

இக்கூட்டத்தில் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் நெகிழிகள் குறித்து காணொலி விளக்கக்காட்சி மூலம் விழிப்புணர்வும், சட்ட விதிகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. மேலும் ஈரோடு மாவட்டத்தில் திருக்கோவில் வளாகங்கள் மற்றும் அருகாமையில் உள்ள கடைகளில் தடைசெய்யப்பட்ட நெகிழிகள் பயன்படுத்துவது மற்றும் விற்பனை செய்வதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.

உள்ளாட்சி அமைப்புகளில் மீண்டும் மஞ்சப்பை தொடர்பான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தவும், தடை செய்யப்பட்ட நெகிழி பயன்பாட்டினை கட்டுப்படுத்தவும் உரிய ஆய்வுகள் மேற்கொண்டு அதன் விவரங்களை வாரியத்திற்கு சமர்ப்பிக் கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டது. மத்திய மாசு கட்டுப்பாடு வாரியத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள வலைதளத்தில் நெகிழி தொடர்பான புகார் மனுக்கள் பெறப்படும்போது அதன்மீது நடவடிக்கை மேற்கொண்டு அதன் விவரத்தினை வலைதளத்தின் வாயிலாக தெரிவிக்கும்படி இக்கூட்டத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டது.

Updated On: 30 March 2023 5:00 AM GMT

Related News