/* */

ஈரோட்டில் தேர்தல் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு

100 சதவீத வாக்களிப்பை உறுதி செய்யும் வகையில், ஈரோட்டில் தேர்தல் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்கப்பட்டது.

HIGHLIGHTS

ஈரோட்டில் தேர்தல் விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு
X

100 சதவீதம் வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில், தேர்தல் விழிப்புணர்வு உறுதிமொழியினை மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா தலைமையில் அனைத்துத்துறை அலுவலர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் ஏற்றுக் கொண்டனர்.

100 சதவீத வாக்களிப்பை உறுதி செய்யும் வகையில், ஈரோட்டில் தேர்தல் விழிப்புணர்வு உறுதிமொழி புதன்கிழமை (இன்று) ஏற்கப்பட்டது.

நாடாளுமன்றத் தேர்தல் 2024ஐ முன்னிட்டு, அனைவரும் 100 சதவீதம் வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில், தேர்தல் விழிப்புணர்வு உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி ஈரோடு மாநகராட்சி சம்பத் நகர் - நசியனூர் சாலை சந்திப்பு பகுதியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், ஈரோடு மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா தலைமையில் அனைத்துத்துறை அலுவலர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் தேர்தல் விழிப்புணர்வு உறுதிமொழியினை ஏற்றுக் கொண்டனர்.


இந்திய தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி, நடைபெற இருக்கும் நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் 2024ஐ முன்னிட்டு வாக்காளர்கள் அனைவரும் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து உறுதி செய்யும் வகையில், பல்வேறு தேர்தல் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, 100 சதவீதம் வாக்குப்பதிவு வலியுறுத்திடும் வகையில் விரல் நுனியில் தேசத்தின் தீர்ப்பை எழுதுவோம் உங்கள் வாக்குமூலம் உங்கள் குரலை உயர்த்துவோம் வாக்காளர் என்பதில் பெருமையாக உங்கள் வாக்களித்து ஜனநாயகத்தை வலுப்படுத்துங்கள் என்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட ரிப்லக் ஜாக்கெட்டுகளை தூய்மை பணியாளர்களுக்கு மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான ராஜ கோபால் சுன்கரா வழங்கினார்.

மேலும், ஜனநாயகத்தின் மீது இணங்கி நடக்கும் நம்பிக்கை உடைய இந்திய குடிமக்களாகிய நாம் நம் நாட்டின் ஜனநாயக மரபுகளையும் சுதந்திரமான நியாயமான மற்றும் அமைதியான தேர்தலின் மாண்பையும் நிலை நிறுத்துவோம் என்றும் மேலும் ஒவ்வொரு தேர்தலிலும் அச்சமின்றி மதம், இனம், சாதி, வகுப்பு, மொழி ஆகியவற்றின் தாக்கங்களுக்கு ஆட்படாமலும் அல்லது எந்த ஒரு தூண்டுதலும் இன்றியும் வாக்களிப்போம் என்று உறுதிமொழிகிறோம் என்ற உறுதிமொழியினை, மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான தலைமையில் அலுவலர்கள் மற்றும் அனைத்து தூய்மை பணியாளர்கள் ஏற்றுக்கொண்டு, இடது கை ஆள்காட்டி விரலை உயர்த்தி நாம் அனைவரும் வாக்களிப்போம் என்று என்று உறுதியளித்தனர்.

இக்கூட்டத்தில், கூடுதல் ஆட்சியரும் (வளர்ச்சி), ஸ்வீப் கண்காணிப்பு அலுவலருமான மணிஷ், ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி, மாநகர பொறியாளர் விஜய்குமார், மாநகர நல அலுவலர் மரு.பிரகாஷ், செயற்பொறியாளர் சண்முகவடிவு உட்பட துப்புரவு ஆய்வாளர்கள் மற்றும் தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 27 March 2024 9:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  2. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  3. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  4. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு
  5. தமிழ்நாடு
    வலிமையான கரியமிலவாயு உறிஞ்சிகளாக இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா:...
  6. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே சுவையான மக்கானா கீர் செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    ஏசி அறையில் தூங்கலாமா? கூடாதா? - விவரமா தெரிஞ்சுக்குங்க!
  9. லைஃப்ஸ்டைல்
    ஆழியில் கண்டெடுத்த அற்புத முத்து..! எங்க வீட்டு இளவரசி..!
  10. தமிழ்நாடு
    வாகனங்களில் ஸ்டிக்கர்களுக்கு தடை! விலக்கு அளிக்க வழக்கறிஞர்கள் சங்கம்...