Begin typing your search above and press return to search.
சத்தியமங்கலம்: செண்பகப்புதூர் பகுதியில் இன்று மின்சாரம் நிறுத்தம்
செண்பகப்புதூர் துணை மின் நிலையத்தில், மாதாந்திரப் பராமரிப்புப் பணி நடப்பதால், இன்று மின் தடை செய்யப்படுகிறது.
HIGHLIGHTS

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் மின்கோட்டம் செண்பகப்புதூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணி நடைபெறவுள்ளதால், இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல், மாலை 2 மணி வரை சத்தியமங்கலம் நகர்ப் பகுதியில் உள்ள காந்தி நகர், ரங்கசமுத்திரம், பேருந்துநிலையம், கோணமூலை, விஐபி நகர், செண்பகபுதூர், அரசூர் உக்கரம், அரியப்பம்பாளையம், மாக்கினாம்கோம்பை, இண்டியம்பாளையம், சிக்கரசம்பாளையம், கெஞ்சனூர், அய்யன்சாவை, தாண்டாம்பாளையம், ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என, சத்தி கோட்ட செயற்பொறியாளர் பி.குலசேகரபாண்டியன் தெரிவித்துள்ளார்.