/* */

அந்தியூரில் முதியவரை கட்டிப்போட்டு ஏரியில் வீச்சு: மாடு திருட முயன்ற கும்பல் கைது

அந்தியூர் அருகே முதியவரை கட்டிப்போட்டு ஏரியில் வீசி விட்டு மாடுகளை திருடிக்கொண்டு செல்ல முயன்ற கும்பலை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

அந்தியூரில் முதியவரை கட்டிப்போட்டு ஏரியில் வீச்சு: மாடு திருட முயன்ற கும்பல் கைது
X

படுகாயமடைந்த முதியவர்‌ அத்தப்பகவுண்டர்.

ஈரோடு மாவட்டம் அந்தியூர் பர்கூர் ரோட்டில் சீதாலட்சுமி தியேட்டர் எதிரில் வசித்து வருபவர் அத்தப்பகவுண்டர் (வயது 68). முதியரான இவர், கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக, அப்பகுதியில் விவசாய நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு சொந்தமாக 20 மாடுகளும் 25க்கும் மேற்பட்ட ஆடுகளும் உள்ளன. இவரது மனைவி காலையிலிருந்து மாலை வரை தோட்டத்தில் வேலை செய்துவிட்டு பெரியார் நகரில் உள்ள வீட்டில் தங்கி வருகிறார்.

இந்நிலையில், அத்தப்பகவுண்டர் மட்டுமே விவசாய தோட்டத்தில் தனியாக இருப்பதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் சிலர் நேற்று நள்ளிரவு மாடுகளைத் திருட நுழைந்தனர்.அப்போது கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த அத்தப்பகவுண்டரின் கை கால்களை கட்டிய முகமூடி அணிந்த மர்ம நபர்கள், அந்தியூரில் ஏரியில் வீசி வந்தனர்.கைகளை கட்டி இருந்த கயிற்றை பற்களால் கடித்து அவிழ்த்த முதியவர், சத்தமிட்டபடி திருடர்களை நோக்கி ஓடி வந்தார். அப்போது அங்கு இருந்த திருடர்கள் கையில் வைத்திருந்த அறிவாளால் தலை மற்றும் பல்வேறு இடங்களில் காயம் ஏற்படுத்தினர்.

அவரது அலறல் சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்ததால், அங்கிருந்த முகமூடி திருடர்கள் மாடுகளை ஏற்ற கொண்டு வந்த பிக்கப் வேனை விட்டு விட்டு தப்பி ஓடினர்.இது குறித்து தகவல் கொடுக்கப்பட்டதின் அடிப்படையில், பிக்கப் வேனை பறிமுதல் செய்து அந்தியூர் போலீசார் தப்பி ஓடிய முகமூடி திருடர்களைத் தேடி வந்தனர். இதில், திருடர்களின் தாக்குதலால் காயம் அடைந்த முதியவர் அத்தப்பகவுண்டர் அந்தியூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனைத்தொடர்ந்து, இன்று காலை ரோந்து பணியில் இருந்த அந்தியூர் போலீசார் சந்தேகத்தின் பேரில் நான்கு பேரை பிடித்து விசாரிக்கையில், புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த ரமேஷ் (20,) இக்பால் (34), மகேந்திரன் (26) சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த அடைக்கலம் (32) என்பதும் இவர்கள் நான்கு பேரும் அந்தியூர் மற்றும் தவிட்டுப்பாளையத்தில் கொங்கு புரோட்டா என்ற பெயரில் உணவகம் நடத்தி வந்ததும், அத்தப்பகவுண்டர் வீட்டில் மாடு திருட முயன்றும் தெரியவந்தது. மேற்கொண்டு போலீசார் நான்கு பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 20 Aug 2022 12:46 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    'அன்பு' வாழும் 'இல்லம்', கூட்டுக்குடும்பம்..!
  2. சேலம்
    மரத்தில் இருந்து தவறி விழுந்து மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல்...
  3. லைஃப்ஸ்டைல்
    மரணம், இயற்கையின் நீள்துயில்..!
  4. நாமக்கல்
    நாமக்கல் டிரினிடி மெட்ரிக் மேல்நிலை பள்ளி, பிளஸ் 2 தேர்வில் சாதனை..!
  5. கோவை மாநகர்
    சுற்றுலா இடங்களில் மதுவுக்கு தடை விதிக்க வேண்டும் : வானதி சீனிவாசன்...
  6. ஈரோடு
    அந்தியூர் அருகே தண்ணீர் தேடி ஊருக்குள் வந்த காட்டு யானை..!
  7. ஈரோடு
    சத்தியமங்கலம் அருகே தனியார் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து
  8. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை எனும் கவசம் அணியுங்கள்..! வாழ்க்கை வெற்றியாக அமையும்..!
  9. லைஃப்ஸ்டைல்
    துரோகிகளை மட்டும் மன்னித்துவிடாதீர்கள்..!
  10. வீடியோ
    🔴LIVE : #vijay -ன் அரசியல் பிரவேசம் ! பகிர் கிளப்பிய #raghavalawrence...