/* */

கழிவுநீரை வெளியேற்றிய 3 சாய ஆலைகளின் மின் இணைப்பு துண்டிப்பு

ஈரோட்டில், கழிவுநீரை வெளியேற்றிய மூன்று சாய ஆலையின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

HIGHLIGHTS

கழிவுநீரை வெளியேற்றிய 3 சாய ஆலைகளின் மின் இணைப்பு துண்டிப்பு
X

சித்தரிப்பு படம் 

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், பூஜ்யநிலைக் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை, முறையாக பராமரிக்காமல், கழிவுநீரை அருகிலுள்ள கால்வாயில் வெளியேற்றும் தொழிற்சாலைகளின் மீது, மின் இணைப்பு துண்டிப்பு உள்ளீட்ட உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதன் அடிப்படையில், சமீபத்தில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் போது, ஈரோடு சூரம்பட்டிவலசு பகுதியில் இயங்கி வந்த மூன்று சாய தொழிற்சாலைகள், அதன் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தை முறையாக இயக்காமல், சுத்திகரிக்கப்படாத கழிவுநீரை அருகிலுள்ள சாக்கடைக் கால்வாயில் வெளியேற்றியது கண்டறியப்பட்டது.

இதையடுத்து, அந்த தொழிற்சாலைகளின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. நீர்நிலைகளில் வெளியேற்றும் தொழிற்சாலைகள் திடக்கழிவுகளை, இரவு நேரங்களில் கொட்டும் வாகனங்கள் மீதும் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு மூலம் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Updated On: 9 Nov 2021 4:15 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    பழுக்க கொட்டப்பட்ட அனல் கங்கின் மேல் தீமிதித்த பக்தர்கள்!#devotional...
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் பசுமை பந்தல் அமைப்பு
  3. ஆன்மீகம்
    நம் கஷ்டங்களை நீக்கும் சக்தி யாரிடம் உள்ளது..!
  4. வீடியோ
    மயிலாடுதுறையில் முதலிடம் பெற்ற மாணவி பகிர்ந்த வெற்றியின் ரகசியம்...
  5. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் 78 விமானங்கள் திடீர் ரத்து! காரணம் இது தானாம்!
  6. சினிமா
    இன்றும் என்றும் எப்போதும் நடிகை திரிஷா மட்டுமே ராணி..!
  7. அரசியல்
    எடப்பாடிக்கு எதிராக அ.தி.மு.க.,வில் புது அணி..!
  8. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. இந்தியா
    கேரளாவில் 'நைல் காய்ச்சல்' பரவல்! 10 பேருக்கு பாதிப்பு!