/* */

ஈரோடு மாவட்டத்தில் 48,500 பேருக்கு கொரோனா தடுப்பூசி

ஈரோடு மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற 15-வது கட்ட தடுப்பூசி முகாமில் 48,500 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

HIGHLIGHTS

ஈரோடு மாவட்டத்தில் 48,500 பேருக்கு கொரோனா தடுப்பூசி
X

தமிழகத்தில் கொரோனா தாக்கத்தை குறைக்கும் வகையில் தடுப்பூசி போடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. 18 வயது நிரம்பிய அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இப்பணிகளை துரிதப்படுத்தும் வகையில், மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது.

நேற்று ஈரோடு மாவட்டம் முழுவதும் 478 மையங்களில் 15- வது கட்ட தடுப்பூசி முகாம் நடந்தது. 1 லட்சத்து 50 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, தடுப்பூசி முகாம், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடந்தது. இதுதவிர நடமாடும் வாகனம் மூலம் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று தடுப்பூசி போடப்பட்டது.

மக்கள் ஆர்வத்துடன் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டனர். நேற்று நடந்த மாபெரும் தடுப்பூசி முகாமில் மாவட்டம் முழுவதும் 48 ஆயிரத்து 500 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Updated On: 19 Dec 2021 2:30 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: மகர ராசிக்கு எப்படி இருக்கும்?
  2. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: தனுசு ராசிக்கு எப்படி இருக்கும்?
  3. லைஃப்ஸ்டைல்
    தர்பூசணி, ஏன் அளவோடு உண்ணவேண்டும்? தெரிஞ்சுக்கங்க..!
  4. லைஃப்ஸ்டைல்
    காதல் கடந்து போகாது...! கூடவே பயணிக்கும்..!
  5. லைஃப்ஸ்டைல்
    இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய்..அன்பே..அன்பே..!
  6. குமாரபாளையம்
    குமாரபாளையம் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள்
  7. காஞ்சிபுரம்
    மர்மமான முறையில் 9 கால்நடைகள் உயிரிழப்பு ?
  8. வீடியோ
    ஜூன் மாதம் நடவிருக்கும் அதிரடி | அடுத்தடுத்து சிக்கும் திமுக...
  9. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: விருச்சிக ராசிக்கு எப்படி இருக்கும்?
  10. குமாரபாளையம்
    வக்கீல்கள் சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு..!