/* */

வாகன சோதனையின் போது லஞ்சம்: சார்பு ஆய்வாளர் பணியிடை நீக்கம்

-டி.ஐ.ஜி., எஸ்.பி., அதிரடி நடவடிக்கை

HIGHLIGHTS

வாகன சோதனையின் போது லஞ்சம்:  சார்பு ஆய்வாளர் பணியிடை நீக்கம்
X

வாகன சேதானையின்போது லஞ்சம் பெற்றதாக எழுந்த புகாரின்பேரில் சாணார்பட்டி காவல் நிலைய சார்பு ஆய்வாளரை பணியிடை நீக்கம் செய்து டி.ஐ.ஜி., முத்துசாமி உத்தரவிட்டுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம், சாணார்பட்டி காவல் நிலையத்தில் எஸ்.ஐ., ஆக பணிபுரிபவர் வாசு 52. இவர் கொரோனா தொற்று காரணமாக பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், இரு தினங்களுக்கு வாகன தணிக்கையில் ஈடுபட்டுள்ளார். அப்போது சாணார்பட்டி வழியாக வந்த நத்தம் அருகே கல்வெலிபட்டியைச் சேர்ந்த பாலமுருகன் என்பவரது மோட்டார் சைக்கிளை நிறுத்தியுள்ளார்.

பின்னர், வழக்கு பதியாமல் விடுவிக்க வேண்டுமானால் ரூ.2ஆயிரம் லஞ்சம் வேண்டும் கேட்டுள்ளார். இதனை அருகில் உள்ள மருந்து கடையில் கொடுத்துவிடு அங்கு உள்ளவரை பெற்றுக் கொண்டாதாக அலைபேசியில் அழைத்துச் சொல்லச் சொல்லுங்கள் என்று கூறியுள்ளார். அதேபோல் செய்த பாலமுருகன். தன் மொபைலில் பேசிய கால் ரெக்கார்டை செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த தகவல் டி.ஐ.ஜி., முத்துச்சாமி கவனத்திற்கு செல்ல விசாரனை செய்ய உத்தரவிட்டார்.

இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட எஸ்.பி., ரவளி பிரியா, விசாரணை அறிக்கையை பரிந்துரை செய்துள்ளார். இதனை அடுத்து, எஸ். ஐ., வாசுவை பணியிடை நீக்கம் செய்து டி.ஐ.ஜி., முத்துச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

Updated On: 25 May 2021 12:13 PM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. ஆன்மீகம்
    பிராணனைக் கட்டுப்படுத்துவதால் நம் உடலுக்கு என்ன பயன்?
  3. அரசியல்
    என் பணம் இல்லீங்க..! நயினார் நாகேந்திரன்..!
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  6. லைஃப்ஸ்டைல்
    ரக்கட் மேற்கோள்கள் தமிழில்...!
  7. ஈரோடு
    ஈரோடு எஸ்விஎன் பள்ளி மாணவன் சிலம்பம் சுற்றி உலக சாதனை புத்தகத்தில்...
  8. ஈரோடு
    ஈரோடு திண்டல் மலைக் கோவிலில் ராஜகோபுரம் அமைக்கும் பணி தீவிரம்
  9. சேலம்
    சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 5வது நாளாக 57 கன அடியாக நீடிப்பு
  10. செங்கம்
    திருவண்ணாமலை மாவட்ட நூலகங்களில் புத்தகத் தின விழா