/* */

குழந்தைகளுக்காக கட்டப்பட்ட கொரோனா சிறப்பு வார்டில் பொருட்கள் திருட்டு

சிறப்பு மையத்தில் ரூ. 60 ஆயிரம் மதிப்புள்ள ஆக்சிஜன் சிலிண்டர்களை இணைக்கும் வால்வுகளை மர்மநபர்கள் திருடிச் சென்றுள்ளனர்

HIGHLIGHTS

குழந்தைகளுக்காக கட்டப்பட்ட கொரோனா சிறப்பு வார்டில்  பொருட்கள் திருட்டு
X

திண்டுக்கல் மருத்துவமனை கொரோனா சிறப்பு வார்டில் திருடு போன  ஆக்சிஜன் சிலிண்டர் வால்வுகள்

திண்டுக்கல் பழைய நீதிமன்றத்தில் புதிதாக குழந்தைகளுக்காக கட்டப்பட்ட கொரோனா சிறப்பு வார்டில் 60 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் திருடு போனது குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.

கொரோனா மூன்றாவது அலை குழந்தைகளை அதிகம் பாதிக்கும் என சுகாதார அமைப்புகள் தெரிவித்ததை அடுத்து திண்டுக்கல் மாவட்டத்தில் மூன்று இடங்களில் குழந்தைகளுக்கான சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டது. அந்த வகையில், திண்டுக்கல் பழைய நீதிமன்ற வளாகத்திற்குள் 75 ஆக்சிஜன் படுக்கைகளுடன் சிறப்பு சிகிச்சை மையம் கட்டப்பட்டது. இந்த மையம் கொரோனா மூன்றாவது கட்டத்தை எட்டாத நிலையில், இன்னும் திறக்கப்படாமல் உள்ளது. சிறப்பு மையத்தில் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது.

இதனிடைய நேற்று இரவு நேரத்தில் சிறப்பு மையத்தில் ரூ. 60 ஆயிரம் மதிப்பிலான ஆக்சிஜன் சிலிண்டர்களை இணைக்கும் 4 சிலிண்டர் இணைப்பு வால்வுகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து மாவட்ட சுகாதாரத்துறை நல பணிகள் இணை இயக்குனர் அளித்த புகாரின் பேரில், நகர் வடக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .

இந்த சிறப்பு மையம் கட்டப்பட்டுள்ள பழைய நீதிமன்ற வளாகத்தில் ஏற்கெனவே உள்ள கட்டிடங்கள் பயன்பாடற்ற நிலையில் உள்ளதால், அந்தக் கட்டிடங்கள் தற்போது சமூக விரோதிகளின் கூடாரமாக செயல்பட்டு வருகிறது.மது அருந்துதல், விபச்சாரம் , கஞ்சா புகைப்பது போன்ற பல்வேறு சமூக விரோதச் செயல்கள் நடப்பதாக கூறப்படுகிறது. எனவே அந்த பகுதியில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Updated On: 25 Nov 2021 11:45 AM GMT

Related News

Latest News

  1. சேலம்
    சேலம்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 5வது நாளாக 57 கன அடியாக நீடிப்பு
  2. ஈரோடு
    ஈரோடு: ரெப்கோ வீட்டுக் கடன் சிறப்பு முகாம்
  3. வீடியோ
    🔴LIVE : தனித்து நின்றால் திமுக டெபாசிட் கூட வாங்காது - பாஜக செய்தி...
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருகே அதிகாலை காா் மீது வேன் மோதல்: 3 போ் உயிரிழப்பு
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் உலக மலேரியா தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
  6. திருவண்ணாமலை
    தூய்மை பணியாளர்களுக்கு உணவளித்து அவர்களுடன் உணவு சாப்பிட்ட கலெக்டர்
  7. நாமக்கல்
    தேர்தல் பணியின்போது உயிரிழந்த ஆசிரியரின் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம்...
  8. ஈரோடு
    பெருந்துறை அருகே முதியவர் எரித்துக் கொலை: சிறுவன் உள்பட 3 பேர் கைது
  9. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் தண்ணீர் பந்தல்கள் அமைக்க அமைச்சர்