/* */

விநாயகர் சதுர்த்திக்கு அனுமதி வேண்டி இந்து முன்னணியினர் உண்ணாவிரதம்

தாடிக்கொம்பு சாலையில் அமைந்துள்ள சித்தி விநாயகர் கோயிலில் திடீர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

விநாயகர் சதுர்த்திக்கு அனுமதி வேண்டி இந்து முன்னணியினர்  உண்ணாவிரதம்
X

திண்டுக்கல்லில் விநாயகர்கோவிலில் திடீர் உண்ணாவிரதம் மேற்கொண்ட இந்து முன்னணியினர்.

திண்டுக்கல் தாடிக்கொம்பு சாலையில் அமைந்துள்ள, சித்தி விநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்திக்கு அனுமதி வேண்டி, இந்து முன்னணியினர் திடீர் உண்ணாவிரதம் மேற்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

விநாயகர் சதுர்த்தியில் கோவில்களைத் திறக்க வலியுறுத்தியும் வீதிகள் தோறும் விநாயகர் சிலை வைத்து வழிபட அனுமதிக்க கோரியும், இந்து முன்னணி அமைப்பின் சார்பில் தாடிக்கொம்பு சாலை சித்தி விநாயகர் கோவில் முன்பு உண்ணாவிரத போராட்டத்தில் இந்து முன்னணியினர் ஈடுபட்டனர்.

மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாகக் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் கடும் நெருக்கடி கொடுப்பதாகவும், தமிழக அரசின் உத்தரவை சுற்றிக் காட்டி, விநாயகர் சதுர்த்தியை தடுக்கும் முயற்சியில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டியும், இந்து முன்னணியின் மாவட்ட செயலாளர் சஞ்சீவிராஜ், கோட்ட செயலாளர் சங்கர் கணேஷ், மாவட்ட துணைத்தலைவர் வினோத்ராஜ் ஆகியோர் தாடிக்கொம்பு சாலையில் அமைந்துள்ள சித்தி விநாயகர் கோயிலில் திடீர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை அறிந்த, திண்டுக்கல் புறநகர் துணை காவல் கண்காணிப்பாளர் சுகுமார், நகர் துணை காவல் கண்காணிப்பாளர் கோகுலகிருஷ்ணன் ஆகியோர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டதையடுத்து, உண்ணாவிரதம் கைவிடப்பட்டது. போக்குவரத்து அதிகம் நிறைந்த சாலையில் அமைந்துள்ள விநாயகர் கோயில் முன்பு இந்து முன்னணியினர் திடீர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On: 9 Sep 2021 4:10 PM GMT

Related News

Latest News

  1. ஈரோடு
    அந்தியூர் அருகே 108 ஆம்புலன்சில் மலை கிராம பெண்ணுக்கு பிறந்த இரட்டை...
  2. சோழவந்தான்
    சோழவந்தான் பஸ் நிறுத்தங்களில் நிழற்குடை அமைத்து தர பொதுமக்கள்
  3. திருமங்கலம்
    சோழவந்தான் பேரூராட்சியில் குடிநீர் பிரச்சினையை தீர்த்த வார்டு...
  4. ஆவடி
    ஆவடி அருகே நடந்த தம்பதியர் கொலை வழக்கில் தேடப்பட்ட இளைஞர் கைது
  5. நாமக்கல்
    நாமக்கல் கூட்டுறவு சங்கத்தில் 2,050 மூட்டை பருத்தி ரூ. 51 லட்சத்திற்கு...
  6. லைஃப்ஸ்டைல்
    திருப்தி மேற்கோள்கள் ஆங்கிலத்தில் அறிவோமா?
  7. திருவள்ளூர்
    திருவள்ளூரில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்த முன்னாள் அமைச்சர் ரமணா
  8. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் இடைநின்ற மாணவர்களை பள்ளிக்கு வரவைக்க நடவடிக்கை
  9. லைஃப்ஸ்டைல்
    எனக்குள் நீ ; உனக்குள் நான்..! தொடர்வோம் இனிதே இணைந்து..!
  10. லைஃப்ஸ்டைல்
    அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே.. நண்பனே.. நண்பனே...!