/* */

தருமபுரியில் வரும் 30ம் தேதி பறிமுதல் வாகனங்கள் ஏலம்: காவல் துறை அறிவிப்பு

தருமபுரியில் வரும் 30ம் தேதி பறிமுதல் வாகனங்கள் ஏலம் விடப்படும் என மாவட்ட காவல் துறை தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

தருமபுரியில் வரும் 30ம் தேதி பறிமுதல் வாகனங்கள் ஏலம்: காவல் துறை அறிவிப்பு
X

பைல் படம்.

தருமபுரி மாவட்டத்தில் மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்டுள்ள 11 நான்கு சக்கர மற்றும் 82 இருசக்கர வாகனங்கள் என மொத்தம் 93 வாகனங்கள் வரும் 30 -ம் தேதி காலை 9 மணிக்கு, தருமபுரி மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் பொது ஏலத்தில் விடப்படவுள்ளன.

நான்கு சக்கர வாகனங்களை ஏலம் எடுக்க விரும்புவோர் முன் வைப்பு தொகையாக ரூ.10,000/-ம், 30 - ம் தேதி காலை 8 மணிக்குள் ஏலம் நடைபெறவுள்ள இடத்தில் செலுத்த வேண்டும். முன் வைப்புத்தொகை செலுத்துவோர் மட்டுமே ஏலத்தில் கலந்துக்கொள்ள அனுமதிக்கப்படுவர்.

ஏலம் விடப்படவுள்ள வாகனங்களைத் தருமபுரி மாவட்ட காவல் அலுவலக வளாகத்தில் அன்று காலை 7 மணிக்கு நேரில் பார்வையிடலாம். இருசக்கர வாகனத்திளை ஏலம் எடுத்தவுடன் ஏலத்தொகை முழுவதையும் செலுத்தி அப்போதே வாகனத்தினைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

நான்கு சக்கர வாகனத்திற்கு ஏலத்தொகைக்கு ஏற்ப 18 விழுக்காடு GST யும், இருசக்கர வாகனத்திற்கு ஏலத்தொகைக்கு ஏற்ப 12 விழுக்காடு GST யும் சேர்த்துச் செலுத்தப்பட வேண்டும். மேலும் விவரங்களுக்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளர், மதுவிலக்கு அமல்பிரிவு, தருமபுரி அவர்களின் அலுவலகத்தினை நேரடியாகவோ, 04342- 230759, 262581 என்ற தொலைபேசி எண் மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம் என தர்மபுரி காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Updated On: 27 March 2022 6:13 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    உடுமலை; காண வேண்டிய அற்புதமான 7 இடங்களை அவசியம் தெரிஞ்சுக்குங்க!
  2. அவினாசி
    பெங்களூரு ஸ்ரீ ஸ்ரீ குருகுல வேதாகம பாட சாலை மாணவா்களுக்கு பயிற்சி...
  3. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகை
  4. திருப்பூர்
    பல்லடம்; மருத்துவா்களுக்கான ‘மெடி அப்டேட்’கருத்தரங்கு
  5. திருவண்ணாமலை
    வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள, ஆட்சியர் அறிவுரை
  6. திருவண்ணாமலை
    அருணாசலேஸ்வரா் கோவிலில் குவிந்த பக்தா்கள்
  7. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் வரும் 4 ம் தேதி முதல் தாராபிஷேகம்
  8. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை
  9. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  10. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?