/* */

கடத்தூர் பகுதியில் காய்கறி விலை கடும் சரிவு: விவசாயிகள் கவலை

கடத்தூர் பகுதியில் காய்கறி விலை தொடர் சரிவு ஒரு கிலோ முள்ளங்கி -2 ரூ, தக்காளி 2-ரூ, புடலை, கத்தரி 4 ரூபாய்க்கு விற்பனை. விவசாயிகள் கவலை .

HIGHLIGHTS

கடத்தூர் பகுதியில் காய்கறி விலை கடும் சரிவு: விவசாயிகள் கவலை
X

கடத்தூர் பகுதியில் காய்கறி விலை தொடர் சரிவு ஒரு கிலோ முள்ளங்கி -2 ரூ, தக்காளி 2-ரூ, புடலை, கத்தரி 4 ரூபாய்க்கு விற்பனை. விவசாயிகள் கவலை .

கடத்தூர் பகுதியில் காய்கறி விலை தொடர் சரிவை சந்தித்து வருகிறது ஒரு கிலோ முள்ளங்கி இரண்டு ரூபாய்க்கும், ஒரு கிலோ தக்காளி இரண்டு ரூபாய்க்கும், கத்தரி புடலை ஆகியவை கிலோ 4 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து காய்கறி விலை சரிவை சந்தித்து வருவதால் கடத்தூர் பகுதி விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர். கடத்தூர் மற்றும் அதனை சுற்றியுள்ள 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் தொடர்ந்து காய்கள் பயிர் செய்து வருகின்றனர். தொடர்பயிராகவும், பணப்பயிராக உள்ள காய்கறி பயிர் செய்யும் விவசாயிகள் தற்போது கடந்த சில நாட்களாக காய்களின் விலை சரிவை சந்தித்து வரும் நிலையில் பெரும் கவலை அடைந்து வருகின்றனர்.

இதுகுறித்து மடத அள்ளிபகுதியைச் சேர்ந்த விவசாயி கோவிந்தராஜ் கூறும்பொழுது, விவசாயிகள் தற்போது தக்காளி, அவரை, முள்ளங்கி, புடலை, கத்தரி ஆகியவையே அதிக அளவாக பயிர் செய்து வருகின்றனர். இந்த நிலையில் பல ஆயிரக்கணக்கான ரூபாய் முதலீடு செய்து பயிர் செய்துள்ள காய் மற்றும் தக்காளி பழங்களுக்கு போதிய விலை இல்லாததால் வயலிலேயே அறுக்காமல் பல விவசாயிகள் மாடுகளை கட்டி மேய்த்து வருகின்றனர். அறுவடை செய்து கடைகளுக்கு விற்பனைக்கு கொண்டு வந்தாலும் போதிய விலை இல்லாத நிலையிலும் வியாபாரிகளும் திருப்பி அனுப்பப்படும் சூழ்நிலையும் மண்டிகளில் மூட்டைகள் காத்திருக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

இதனால் போட்ட முதலீடு மட்டுமின்றி அறுவடை செய்யும் பணியாளர்களுக்கு கூலி கூட கொடுக்க முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. எனவே தமிழக அரசு காய்களின் விலை தொடர் வீழ்ச்சி கண்டு வருவதை தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் காய்கறி பயிரிட்ட விவசாயிகளை கணக்கெடுத்து இழப்பீடு வழங்க வேண்டுமெனவும் விவசாயிகள் சார்பில் வேண்டுகோள் வைத்தார்.

Updated On: 28 March 2022 5:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  2. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  3. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  4. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  5. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  6. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது
  7. மேலூர்
    மதுரை அருகே வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பது குறித்த மருத்துவ...
  8. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  9. மேலூர்
    மதுரை அருகே வெள்ளரி பட்டியில் நடைபெற்ற பாரம்பரிய பதவி ஏற்பு விழா
  10. திருவள்ளூர்
    அரசு பேருந்துகளின் அவல நிலை: உடனடியாக சீரமைக்க பயணிகள் கோரிக்கை