/* */

10.5 சதவீத இட ஒதுக்கீட்டில் நிச்சயம் வெற்றி பெறுவோம்: டாக்டர் இராமதாஸ் பேச்சு

10.5 சதவீத இட ஒதுக்கீட்டில் நிச்சயம் வெற்றி பெறுவோம் என டாக்டர் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

10.5 சதவீத இட ஒதுக்கீட்டில் நிச்சயம் வெற்றி பெறுவோம்: டாக்டர் இராமதாஸ் பேச்சு
X

தர்மபுரியில் நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் ஒருங்கிணைந்த மாவட்ட செயற்குழுக்கூட்டத்தில் சிறப்புரையாற்றிய கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ்.

பாட்டாளி மக்கள் கட்சியின் ஒருங்கிணைந்த மாவட்ட செயற்குழுக்கூட்டம் தர்மபுரியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் இராமதாஸ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

தருமபுரி மாவட்டம் பாட்டாளி மக்கள் கட்சிக்கு வெற்றியையும் தேடித்தந்த மாவட்டம் தோல்வியையும் தேடித்தந்த மாவட்டம். அன்புமணி ராமதாஸ் நாடாளுமன்ற உறுப்பினராக தர்மபுரியில் வெற்றி பெற்றபோது பணியாற்றிய திண்ணைப் பிரச்சாரம் செய்து வெற்றி பெறச் செய்தீர்கள். அதன் பிறகு வந்த தேர்தலில் வெற்றி கிடைக்கவில்லை.

இனிவரும் தேர்தல்களில் திண்ணை பிரச்சாரம் செய்து சமூக ஊடகத்தை முறையாக பயன்படுத்தி பிரச்சாரம் செய்தால் வெற்றி நிச்சயம் கிடைக்கும்.

108 சமுதாயங்களில் பெரும்பாலான சமுதாயங்கள் 10.5 சதவீத வன்னியர் இட ஒதுக்கீடு வழங்கியது தவறு என போர்க்கொடி தூக்கி உயர் நீதிமன்றத்துக்குச் சென்று தீர்ப்பு பெற்றுள்ளனர்.

இத் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் முறையிட்டு தடை பெற தற்போது இருக்கின்ற அரசு எல்லாவிதமான முயற்சிகளையும் மிகச் சிறப்பாக செய்து கொண்டிருக்கிறார்கள் அவர்களை பாராட்ட வேண்டும்.

10.5 சதவீத இட ஒதுக்கீட்டில் நிச்சயம் வெற்றி பெறுவோம். இந்த அரசு மூத்த வழக்கறிஞர்களை நியமனம் செய்து வாதாட இருக்கிறது. விரைவில் தடை கிடைக்கும். கடந்த சட்டமன்றத் தேர்தலில் பாமகவிற்கு 23தொகுதிகள் ஒதுக்கப்பட்டன.

10 .5 சதவீத இட ஒதுக்கீடு தரவில்லை என்றால் போட்டியிடவில்லை ஆதரவு மட்டும் தருகிறோம். பாமக தரப்பில் 15 சதவீத இட ஒதுக்கீடு கேட்கப்பட்டது. ஆனால் அவர்கள் வழங்கியது 10.5. சதவீதம் மட்டுமே பாமக கட்சியை ஆரம்பித்தது மக்களை நம்பி; ஆனால் இந்த மக்கள் பல்வேறு கூறுகளாக பல்வேறு பிரிவுகளாக பல்வேறு கட்சிகளாக மாறி இருக்கிறார்கள். 23 தொகுதிகளில் 20 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.

ஒட்டுமொத்த வன்னியர்களும் பிரச்சாரம் செய்து பிற சமுதாய வாக்குகளை பெற்று வெற்றி பெற்றிருக்க வேண்டும். 20 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தால் பாட்டாளி மக்கள் கட்சியின் பலம் எப்படி இருந்திருக்கும். 5 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்றிருக்கிறது.

இரண்டு தொகுதிகளில் பாமகவினரே பாமகவினரை தோற்கடித்து இருக்கிறார்கள். இவர்களுக்கு சமுதாயத்தின் மீது பற்று இருக்கிறதா ராமதாசின் உழைப்பை அவர்கள் எண்ணி பார்த்தார்களா? என் அறிக்கை, ட்விட்டர், முகநூல் பதிவு அனைத்திலும் தமிழ்நாட்டு மக்களுக்காக தமிழ்நாட்டின் நலனுக்காக உரிமைக்காக வேளாண்மைக்காகவும்; எங்கே பிரச்சனை இருந்தாலும் அதற்காக முதல் குரல் என்னிடம் இருந்து தான் வரும் என்று ராமதாஸ் பேசினார்.

இந்தக் கூட்டத்தில் பாமக தலைவர் ஜி கே மணி, தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி. வெங்கடேஸ்வரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரா.செந்தில், பாரி மோகன், மாவட்ட செயலாளர் பி.வி. செந்தில், மாநில துணைத் தலைவர்கள் சாந்தமூர்த்தி, பாடி செல்வம், உழவர் பேரியக்க மாநில செயலாளர் இல.வேலுசாமி மற்றும் நிர்வாகிகள் அரசாங்கம், முருகசாமி, பசுமைத்தாயகம் மாது, பென்னாகரம் ஒன்றியக்குழு தலைவர் கவிதா இராமகிருஷ்ணன், நல்லம்பள்ளி ஒன்றியகுழுதலைவர் மகேஸ்வரி பெரியசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Updated On: 12 Dec 2021 7:45 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் தூய்மை பணியில் ஈடுபட்ட அமைச்சர்
  3. செய்யாறு
    செய்யாறு அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு...
  4. திருவண்ணாமலை
    கார் விபத்தில் சிக்கிய அமைச்சரின் மகன்: போலீசார் விசாரணை
  5. நாமக்கல்
    நாமக்கல்லில் இன்னுயிர் காப்போம் திட்டம்: 6,568 பேருக்கு ரூ. 4.73 கோடி...
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  7. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் இயற்கை உணவு திருவிழா
  8. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  10. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு