/* */

மகளிர் உரிமைகள், பாதுகாப்பு, வாழ்வாதார மேம்பாடு குறித்த ஆய்வுக்கூட்டம்

தருமபுரியில் மகளிர் உரிமைகள், பாதுகாப்பு மற்றும் வாழ்வாதார மேம்பாடு குறித்த ஆய்வுக்கூட்டம் ஆணைய தலைவி தலைமையில் நடந்தது.

HIGHLIGHTS

மகளிர் உரிமைகள், பாதுகாப்பு, வாழ்வாதார மேம்பாடு குறித்த ஆய்வுக்கூட்டம்
X

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  மகளிர் மேம்பாடு பற்றிய ஆய்வு கூட்டம் நடந்தது.

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் .திவ்யதர்சினி முன்னிலையில், தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத் தலைவர் ஏ.எஸ்.குமாரி தலைமையில் மகளிர் உரிமைகள், பாதுகாப்பு மற்றும் வாழ்வாதார மேம்பாடு குறித்த ஆய்வுக்கூட்டம் இன்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில் தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையத் தலைவர் ஏ.எஸ்.குமாரி பேசும்போது

தமிழ்நாடு மாநில மகளிர் ஆணைய தலைவராக பொறுப்பேற்று முதன்முறையாக தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களுக்கு வருகை தந்து, பல்வேறு துறைகளின் சார்பில் மகளிருக்கு செயல்படுத்தப்பட்டு வருகின்ற திட்டங்கள் மற்றும் மகளிர் உரிமைகள், பாதுகாப்பு மற்றும் வாழ்வாதார மேம்பாடு உள்ளிடவற்றிற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மற்றும் மருத்துவத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

மகளிர் ஆணையத்தின் முக்கிய நோக்கம், பெண்களின் உரிமைகளை பாதுகாத்தல், பெண்களின் வாழ்வாதார முன்னேற்றத்திற்கான திட்டங்களை முன்னெடுத்தல், பெண் கல்வி, பெண் பாதுகாப்பு உள்ளிட்டவற்றை பெண்களுக்கு முழுமையாக உருவாக்குவதற்கான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, குழந்தை திருமண தடுப்பு, பெண் பாலியல் வன்கொடுமை தடுப்பு உள்ளிடவற்றை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் போன்ற பல்வேறு பணிகளை ஆணையம் மேற்கொண்டு வருகின்றது. இதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சிகளிலும் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பெண் மக்கள் பிரதிநிதிகளை / பெண் மாமன்ற உறுப்பினர்களை கொண்ட குழு அமைத்து பெண்களுக்கான விழிப்புணர்வை முழுமையாக மேற்கொள்வதற்கான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவர்களுக்கு இதற்காக விரைவில் சென்னையில் பயிற்சி பட்டறை நடத்திடவும் திட்டமிடப்பட்டுள்ளது.

பெண்களின் பாதுகாப்பிற்காக 181 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டால் பெண்களுக்கான சட்ட உதவிகள், மருத்துவ உதவிகள் போன்ற அனைத்து உதவிகளும் கிடைக்கும். இதுகுறித்து அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும், அரசு, தனியார் அலுவலகங்கள், நிறுவனங்கள் போன்றவற்றில் பெண்கள் பணியாற்றக்கூடிய இடங்களில் 10-க்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றினால் அங்கு கட்டாயம் உள் புகார் குழுக்கள் கட்டாயம் அமைக்கப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்கள் தங்களுக்கு பிரச்சினை என்று வரும்பொழுது அவர்களிடம் கணிவாக பேசி, அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து அவற்றின் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. பெண்களை காப்பதற்கும், பெண்கல்வி ஊக்குவிப்பதற்கும், குழந்தை திருமண தடுப்பு, பாலியல் வன்கொடுமை தடுப்பு போன்றவற்றை முற்றிலும் தடுப்பதற்கும், பெண்களின் முன்னேற்றத்திற்கு உதவுவதற்கும் அனைவரும் ஒன்றிணைந்து, ஒருங்கிணைந்து பணியாற்றிட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

இக்கூட்டத்தில் தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன், தருமபுரி சார் ஆட்சியர் சித்ரா விஜயன், தமிழ்நாடு மாநில மகளிர் ஆணைய உறுப்பினர் டாக்டர்.மாலதி, அரூர் வருவாய் கோட்டாட்சியர் முத்தையன், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவின் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குணசேகரன், துணை காவல் கண்காணிப்பாளர் வினோத், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் வீ.ஜான்சிராணி, மாவட்ட சமூக நல அலுவலர் ச.பவித்ரா, இணை இயக்குநர் (நலப்பணிகள்) மரு.மலர்விழி வள்ளல், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மரு.சவுண்டம்மாள், உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Updated On: 23 March 2022 9:00 AM GMT

Related News

Latest News

  1. வேலைவாய்ப்பு
    குரூப் 4- வி.ஏ.ஓ தேர்வு முழு சிலபஸ் டவுன்லோட் செய்வது எப்படி?
  2. வேலைவாய்ப்பு
    ரயில்வே பாதுகாப்பு எஸ்.ஐ., ஆக விருப்பமா?
  3. லைஃப்ஸ்டைல்
    போலி பெஸ்டி கூட ஏற்படுவது சண்டையா..கோபமா..?
  4. லைஃப்ஸ்டைல்
    என் இதயத்துடிப்பின் சுவாசமே நீதாண்டா..!
  5. வேலைவாய்ப்பு
    4000 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி...
  6. லைஃப்ஸ்டைல்
    அக்கா என்பவர் இன்னொரு அம்மா..!
  7. லைஃப்ஸ்டைல்
    மூளைத்திறனை மேம்படுத்தும் 12 வழிகள்
  8. விளையாட்டு
    கரூரில் மாணவ- மாணவிகளுக்கு கோடை கால பயிற்சி முகாம் நாளை துவக்கம்
  9. லைஃப்ஸ்டைல்
    தாய்மையின் தூய்மை எந்த உறவில் வரும்? எண்ணாத நாளில்லை..!
  10. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி அறிவாளர் பேரவை வெள்ளி விழா மற்றும் புதிய நிர்வாகிகள் பதவி...