/* */

குடியரசுதின விழா: தருமபுரி மாவட்ட ஆட்சியர் தேசியக்கொடியேற்றினார்

தர்மபுரி 73 வது குடியரசு தின விழா மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி தேசியக்கொடி ஏற்றி வைத்து, நலத்திட்ட உதவிகளை வழங்கினார்

HIGHLIGHTS

குடியரசுதின விழா: தருமபுரி  மாவட்ட ஆட்சியர் தேசியக்கொடியேற்றினார்
X

தர்மபுரி 73 வது குடியரசு தின விழா மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி தேசியக்கொடி ஏற்றி வைத்து  நலத்திட்ட உதலிகள் வழங்கினார்

தர்மபுரி 73 -ஆவது குடியரசு தின விழா மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி தேசியக்கொடி ஏற்றி வைத்தார்

தர்மபுரி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற நாட்டின் 73-ஆவது குடியரசு தினவிழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் ச.திவ்யதர்சினி, தேசிய கொடியினை ஏற்றி வைத்து, மரியாதை செலுத்தி, காவல் துறையினரின் அணி வகுப்பு மரியாதையினை ஏற்றுக்கொண்டார்.

இதனை தொடர்ந்து, தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த 27 காவலர்களுக்கு 2022 -ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் காவலர் பதக்கங்களையும்,காவல்துறை, வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, பேரூராட்சிகள் துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, ஊராட்சித்துறை உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறைகளில் சிறப்பாக பணிபுரிந்த 50 அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் கொரோனா பெருந்தொற்று காலத்தில் தன்னலம் பாராமல் சிறப்பாக பணியாற்றிய 39 மருத்துவர்களுக்கும், உள்ளாட்சி அமைப்புகளில் கொரோனா பெருந்தொற்று காலத்தில் தன்னலம் பாராமல் சிறப்பாக பணியாற்றிய 12 தூய்மை பணியாளர்களுக்கும் என மொத்தம் 101 நபர்களுக்கு நற்சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.திவ்யதர்சினி, வழங்கினார்கள்.

பின்னர், உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்கள், இணையவழி பட்டா மாற்றம் ஆகிய இனங்களில் இலக்கினை எய்து சிறப்பாக செயல்பட்ட அரூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கேடயம் பரிசாகவும், அதிக அளவில் வழக்கு பதிவுகள் செய்துள்ளதுடன், நிலைய பராமரிப்பு மற்றும் வழக்கின் விசாரணைகளை விரைந்து முடித்தமைக்காகவும் சிறந்த காவல் நிலையமாக தேர்வு செய்யப்பட்ட அதியமான் கோட்ட காவல் நிலையத்திற்கு கேடயம் பரிசாகவும், கொரோனா பெருந்தொற்று காலத்தில் 500க்கும் மேற்ப்பட்டோர் உள்நோயாளிகளாக அனுமதித்து சிறப்பான சிகிச்சை அளித்தும், மாதத்திற்கு 150க்கும் மேற்ப்பட்ட பிரசவங்கள் மற்றும் பல்வேறு மருத்துவ சிகிச்சைகளையும் அளித்த பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு கேடயம் பரிசாகவும், சிறந்த அரசு ஆரம்ப சுகாதார நிலையமாக தேர்வு செய்யப்பட்ட நாகாதாசம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கேடயம் பரிசாகவும், வட்டார அளவில் சிறப்பாக பணிகளை மேற்கொண்டு, சிறந்த ஊராட்சி ஒன்றியமாக தேர்வு செய்யப்பட்ட தர்மபுரி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு கேடயம் பரிசாகவும், 2019-2020-ஆம் ஆண்டில் சிறந்த பள்ளிகளாக தேர்வு செய்யப்பட்ட குண்டலமடுவு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, நரசிங்கபுரம் கோம்பை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கருங்கல்மேடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆகிய 3 பள்ளிகளுக்கு கேடயங்களை பரிசாக வழங்கப்பட்டது.

பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் 2021-2022 ஆம் கல்வியாண்டில் மகிழ் கணிதம் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு எளிய வழியாக கணிதம் கற்பித்தல் பயிற்சி சிறப்பாக நிறைவு செய்த 9 ஆசியர்களுக்கு பாராட்டு சான்றிதழ்களையும், மாவட்ட அளவில் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு வங்கி கடன் இணைப்பு பெற்று தந்தமைக்காக மாவட்ட அளவில் சிறந்த வங்கியாக தேர்வு செய்யப்பட்ட தர்மபுரி இந்தியன் வங்கிக்கும், மாவட்ட அளவில் சிறந்த வங்கி கிளைகளாக தேர்வு செய்யப்பட்டு முதலிடம் பெற்ற காரிமங்கலம் இந்தியன் வங்கி கிளைக்கும், இரண்டாம் இடம் காரிமங்கலம் தமிழ்நாடு கிராம வங்கி கிளைக்கும், மூன்றாம் இடம் பெற்ற தர்மபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கும் விருதுகளும்

மாவட்ட அளவில் மருத்துவ காப்பீட்டுத் திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி சிறந்த மருத்துவமனைகளாக தேர்வு செய்யப்பட்ட தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, அரூர் அரசு மருத்துவமனை மற்றும் தருமபுரி சுபா மருத்துவமனை ஆகிய 3 மருத்துவமனைகளை பாராட்டி நற்சான்றிதழ்களையும் மாவட்ட ஆட்சித்தலைவர் ச.திவ்யதர்சினி வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சியில் பென்னாகரம் சட்டமன்ற உறுப்பினர் ஜி. கே. மணி, தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ். பி. வெங்கடேஸ்வரன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலைச்செல்வன்,மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா, தாசில்தார் ராஜராஜன் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 26 Jan 2022 7:45 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    மத்திய பல்கலைக்கழகங்கள் பற்றி தெரியுமா மாணவர்களே..?
  2. சுற்றுலா
    ஊட்டி போக போறீங்களா...? இதை படிச்சிட்டு மகிழ்ச்சியா போயிட்டு
  3. வீடியோ
    பழுக்க கொட்டப்பட்ட அனல் கங்கின் மேல் தீமிதித்த பக்தர்கள்!#devotional...
  4. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் பசுமை பந்தல் அமைப்பு
  5. ஆன்மீகம்
    நம் கஷ்டங்களை நீக்கும் சக்தி யாரிடம் உள்ளது..!
  6. வீடியோ
    மயிலாடுதுறையில் முதலிடம் பெற்ற மாணவி பகிர்ந்த வெற்றியின் ரகசியம்...
  7. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் 78 விமானங்கள் திடீர் ரத்து! காரணம் இது தானாம்!
  8. சினிமா
    இன்றும் என்றும் எப்போதும் நடிகை திரிஷா மட்டுமே ராணி..!
  9. அரசியல்
    எடப்பாடிக்கு எதிராக அ.தி.மு.க.,வில் புது அணி..!
  10. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்