/* */

நேரு நகரில் தேங்கிய மழைநீர் வெளியேற்றம்: பா.ம.க எம்எல்ஏ.,வுக்கு மக்கள் பாராட்டு

நேரு நகரில் தேங்கிய மழைநீர் பா.ம.க. எம்எல்ஏ., வெங்கடேஸ்வரன் நடவடிக்கையால் வெளியேற்றப்பட்டதால் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

HIGHLIGHTS

நேரு நகரில் தேங்கிய மழைநீர் வெளியேற்றம்: பா.ம.க எம்எல்ஏ.,வுக்கு மக்கள் பாராட்டு
X

நேரு நகரில் சாக்கடைத் தண்ணீரில் இறங்கி ஆய்வு பணியில் ஈடுபட்ட தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரன்.

தர்மபுரி மாவட்டம், தடங்கம் ஊராட்சிக்கு உட்பட்ட நேரு நகர் பகுதியில் 900 குடும்பங்கள் உள்ளன. இப்பகுதியில் உள்ள வீடுகளின் வெளியில், மழை நீர் செல்ல போதிய வடிகால் வசதி இல்லாததால், ஏமக்குட்டியூர் செல்லும் வழியில் உள்ள சாலையில் சுமார் நான்கு அடி உயரத்தில் மழைநீர் மற்றும் சாக்கடை நீர் தேங்கி இருந்தது.

இவ்வழியில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளுக்கு செல்வோர் தண்ணீரிலேயே கடந்த இரண்டு வாரங்களாக தங்கள் வீடுகளுக்குச் சென்றனர்.

இதனை அடுத்து இப்பகுதி மக்கள் தர்மபுரி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.பி. வெங்கடேஸ்வரனை தொடர்பு கொண்டு, மழைநீர் வெளியேற வழிவகை செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்கள். உடனடியாக அப் பகுதியை ஆய்வு செய்த சட்டப்பேரவை உறுப்பினர், வெங்கடேஸ்வரன், நெடுஞ்சாலைத்துறை, உள்ளாட்சி துறை அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி மக்கள் பிரதிநிதிகளை அழைத்து பேசி எமக்குடியூர் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் பள்ளம் தோண்டி குழாய் அமைத்து தேங்கிக்கிடந்த சாக்கடை தண்ணீர் மற்றும் மழை நீரை வெளியேற்றினார்.

ஏற்கனவே கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இதே பகுதியில் தண்ணீர் தேங்கி நின்ற பொழுது அதிகாரிகளிடம் தண்ணீர் வெளியேற வடிகால் அமைக்க அறிவுறுத்தினார். ஆனால் அதிகாரிகள் செயல்படாததால் இன்று தண்ணீர் முழுவதும் வெளியேறினால் மட்டுமே இப்பகுதியில் இருந்து செல்வேன் எனக் கூறி, தண்ணீர் முழுவதும் வெளியேறி பிறகு அப்பகுதியில் இருந்து சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரன் கிளம்பினார்.

இதனால் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர் பொதுமக்கள் தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசனுக்கு தங்களது நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.

Updated On: 21 Nov 2021 4:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உங்கள் கணவருக்கு உணர்ச்சிகரமான திருமண நாள் வாழ்த்துக்கள்
  2. நத்தம்
    நத்தத்தில் அதிமுக சார்பில், நீர் மோர் பந்தல் திறப்பு: முன்னாள்...
  3. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. ஆன்மீகம்
    காற்றையாவது காசு கொடுக்காமல் வாங்குவோம்..!
  6. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 82 கன அடியாக அதிகரிப்பு
  7. சினிமா
    டி.எம்.எஸ்.,சுக்கு உதவிய சிவாஜி..!
  8. சினிமா
    இளையராஜா பாடிய முதல் பாடலே ட்ரெண்ட் செட்டானது... எப்படி?
  9. தமிழ்நாடு
    ஓய்வூதிய பலன்கள் கிடைப்பதை உறுதி செய்ய அரசு அறிவுறுத்தல்..!
  10. அரசியல்
    நரேந்திரமோடி- வாஜ்பாய் ஒற்றுமைகள் என்ன?