/* */

தர்மபுரி மாவட்டத்தில் பரவலாக மழை; பொதுமக்கள் மகிழ்ச்சி

தர்மபுரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்துள்ளது; மாவட்டத்தில் 36 மி.மீ மழை பதிவாகி உள்ளது.

HIGHLIGHTS

தர்மபுரி மாவட்டத்தில் பரவலாக மழை;  பொதுமக்கள் மகிழ்ச்சி
X

கோடை காலம் தொடங்கியுள்ள நிலையில், தருமபுரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக 100 டிகிரிக்கு வெப்பம் வீசி வந்தது. இதனை தொடர்ந்து, தருமபுரி மாவட்டத்தில் நேற்று மாலை திடீரென மேகம் சூழ்ந்து மழை பொழியத் தொடங்கியது.

அரூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராம பகுதிகளில் நல்ல மழை பெய்தது. தருமபுரி, ஒடசல்பட்டி, கடத்தூர், மொரப்பூர், பாப்பிரெட்டிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் சாரல் மழை பொழிந்தது. இதனால் கோடை வெப்பம் தணிந்து குளிர்ந்த சீதோஷ்ண நிலை ஏற்பட்டதால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தர்மபுரி மாவட்டத்தில் இன்று காலை 6 மணி நிலவரப்படி 36மி.மீ மழை பதிவாகியுள்ளது. தர்மபுரியில் 11 மில்லி மீட்டரும், பென்னாகரத்தில் 2 மில்லி மீட்டர், அரூர் 15 மில்லி மீட்டரும், பாப்பிரெட்டிப்பட்டியில் 8 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. சராசரியாக 5.14 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. பாலக்கோடு மாரண்டஅள்ளி, ஒகேனக்கல் ஆகிய பகுதிகளில் மழை பெய்யவில்லை.

Updated On: 22 March 2022 6:30 AM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    வாட்ஸ்அப்பில் கடவுச்சொல் தேவையில்லை!
  2. லைஃப்ஸ்டைல்
    இதயங்கள் என்னவோ வேறு வேறுதான்..! உன்னில் நான்; என்னில் நீ..!
  3. கோவை மாநகர்
    எப்போது தேர்தல் வந்தாலும் எடப்பாடியார் முதல்வராக வருவார் : எஸ்.பி....
  4. உலகம்
    அழகென்றால் இளமை மட்டும் இல்லை: 60 வயதில் அசத்தும் வழக்கறிஞர்
  5. சினிமா
    கருவில் கரைந்த எம்.ஜி.ஆர்., குழந்தை..!
  6. நாமக்கல்
    ப.வேலூர் அருகே வாலிபர் மர்ம மரணம்! போலீசார் தீவிர விசாரணை!
  7. லைஃப்ஸ்டைல்
    அக்காவுக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்துகள்..!
  8. நாமக்கல்
    மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மைத்துனரை தாக்கிய வாலிபர் கைது..!
  9. நாமக்கல்
    ஏ.மேட்டுப்பட்டி ஸ்ரீ ராமர் கோயிலில் உழவாரப்பணிகள் துவக்க விழா..!
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்வில் வெற்றி பெற வழிகள்