/* */

தருமபுரி நகராட்சித் தலைவர் செயல்பாடுகளில் கட்சியினர் அதிருப்தி

கடந்த அதிமுக ஆட்சியின் போது கட்டப்பட்ட அறையில் அமர மாட்டேன் என அடம் பிடித்து புதிய அறை அமைக்க பூமி பூஜை போட்டுள்ளார்

HIGHLIGHTS

தருமபுரி நகராட்சித் தலைவர் செயல்பாடுகளில் கட்சியினர் அதிருப்தி
X

தர்மபுரி நகராட்சி தலைவர் 

33 வார்டுகளை கொண்ட தருமபுரி நகராட்சியை நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் திமுக கைப்பற்றியது. தருமபுரி நகர திமுக செயலாளர் அன்பழகனின் மனைவி நித்யா நகராட்சி தலைவராக தேர்வு செய்யப்படுவார் என திமுக நிர்வாகிகள் பலரும் கூறி வந்த நிலையில், யாரும் எதிர்பாராத விதமாக திமுகவின் நாட்டான் மாது மனைவி லட்சுமியை கட்சித் தலைமை வேட்பாளராக அறிவித்தது. நித்யாவுக்கு துணைத் தலைவர் பதவி வழங்கப்பட்டது.

நாட்டான் மாது பல்வேறு முறைகேடு புகாரில் சிக்கியவர். மேலும், தருமபுரி மாவட்ட தொழிலதிபர் ஒருவரின் பினாமியாக செயல்படுகிறார் என்ற குற்றச்சாட்டும் அவர் மீது உள்ளது. இதனால், திமுக நிர்வாகிகள் பலர் அதிருப்தியில் இருந்தனர்.

தற்போது நகராட்சி சேர்மன் லட்சுமியின் செயல்பாடுகள் கட்சியினரிடைய மேலும் அதிருப்தியை உண்டாக்கியுள்ளது. தலைவராக பொறுப்பேற்ற இரண்டாவது நாளே முக்கிய தொழிலதிபரின் வீட்டிற்கு தார் சாலை போடப்பட்டுள்ளது. தனது கணவர் மாது கூறும் விஷயங்களில் மட்டும் தான் கையெழுத்து போடுகிறாராம்.

தருமபுரி நகராட்சி அலுவலகம் கடந்த அதிமுக ஆட்சியின் போது கட்டப்பட்ட புதிய கட்டடத்தில் உள்ள தலைவர் அலுவலகத்தை பயன்படுத்தாமல், பழையை அறையில் அமர மாட்டேன் என அடம் பிடித்து ரூ.5 லட்சம் செலவில் புதிய அறை அமைக்க பூமி பூஜை போடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. இதுவும் கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது

கடந்த வாரம் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நடைபெற்ற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டில், திமுக அரசை மக்கள் பாராட்டும் விதமாக மேயர், துணை மேயர், நகராட்சி தலைவர், கவுன்சிலர்கள் செயல்பட வேண்டும், மக்களோடு மக்களாக இணைந்து பணியாற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. மேலும், பெண் பிரதிநிதிகள் தங்களது குடும்பத்தினரை அலுவல் பணிகளில் தலையிட வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் முதலமைச்சர் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவை மீறி செயல்படும் நகராட்சி தலைவர் லட்சுமி மீது திமுக நிர்வாகிகள் சிலர் ஆதாரங்களுடன் புகார் அனுப்ப திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், லட்சுமி நகராட்சி தலைவர் பதவியில் இருந்து விரைவில் நீக்கப்படலாம் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

Updated On: 18 April 2022 3:34 AM GMT

Related News

Latest News

  1. நத்தம்
    நத்தத்தில் அதிமுக சார்பில், நீர் மோர் பந்தல் திறப்பு: முன்னாள்...
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. ஆன்மீகம்
    காற்றையாவது காசு கொடுக்காமல் வாங்குவோம்..!
  5. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 82 கன அடியாக அதிகரிப்பு
  6. சினிமா
    டி.எம்.எஸ்.,சுக்கு உதவிய சிவாஜி..!
  7. சினிமா
    இளையராஜா பாடிய முதல் பாடலே ட்ரெண்ட் செட்டானது... எப்படி?
  8. தமிழ்நாடு
    ஓய்வூதிய பலன்கள் கிடைப்பதை உறுதி செய்ய அரசு அறிவுறுத்தல்..!
  9. அரசியல்
    நரேந்திரமோடி- வாஜ்பாய் ஒற்றுமைகள் என்ன?
  10. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்