/* */

தருமபுரி- கிருஷ்ணகிரி மண்டல கலந்தாய்வுக் கூட்டம்: வனத்துறை அமைச்சர் பங்கேற்பு

வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தலைமையில் மண்டல அளவிலான கலந்தாய் வுக்கூட்டம் தருமபுரியில் நடைபெற்றது பங்கேற்பு

HIGHLIGHTS

தருமபுரி- கிருஷ்ணகிரி  மண்டல  கலந்தாய்வுக் கூட்டம்: வனத்துறை அமைச்சர் பங்கேற்பு
X

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கலந்தாய்வுக்கூட்டத்தில்  நலதிட்ட உதவிகள் வழங்குகிறார் தமிழக வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன்


வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன்

தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டல அளவிலான கலந்தாய்வுக்கூட்டம்வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.

தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில், வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தலைமையில் தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களை உள்ளடக்கிய மண்டல அளவிலான கலந்தாய்வுக்கூட்டம் இன்று நடைபெற்றது.

இக்கலந்தாய்வு கூட்டத்திற்கு தர்மபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் ச.திவ்யதர்சினி, சட்டமன்ற உறுப்பினர்கள் ஜி.கே.மணி (பென்னாகரம்), ஆ.கோவிந்தசாமி (பாப்பிரெட்டிப்பட்டி), வே.சம்பத்குமார் (அரூர்), வெங்கடேஸ்வரன் (தர்மபுரி) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இக்கலந்தாய்வு கூட்டத்தில், வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் கூறியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, அடித்தட்டு மக்களும் பயன்பெறுகின்ற வகையில், மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, தமிழ்நாடு வனத்துறையின் செயல்பாடுகள் மற்றும் திட்ட முன்னேற்றங்கள் குறித்து மாவட்டம் தோறும் ஆய்வுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுரையின்படி, தமிழகத்தில் உள்ள 38 மாவட்டங்களிலும் நேரடியாக சென்று, மாவட்ட ஆட்சித்தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், வனத்துறையின் உயர் அலுவலர்கள், ஆகியோர்களை கொண்டு மாவட்ட அளவிலான கலந்தாய்வு கூட்டம் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில், இன்றைய தினம் மண்டல அளவிலான கலந்தாய்வுக் கூட்டம் தர்மபுரி மாவட்டத்தில் நடத்தப்பட்டுள்ளது.இந்த அரசு பொதுமக்களின் தேவைகளை அறிந்து, தகுதியுடைய கோரிக்கைகளின் மீது உடன் நடவடிக்கைகள் மேற்கொண்டு, சிறப்பாக செயல்படுகின்ற அரசாக திகழ்ந்து, பிற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக திகழ்ந்து வருகிறது. அதன்படி, இன்றையதினம் பெறப்பட்டுள்ள பல்வேறு கோரிக்கைகளை உரிய பரிசீலனைக்குட்படுத்தப்பட்டு, தகுதியான கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

வனத்துறை மேம்பாட்டிற்காக ரூ.100 கோடி மதிப்பீட்டில் வனத்துறை, வருவாய்த்துறை, பள்ளிக்கல்வித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து, தமிழ்நாடு கிரீன் கிளைமட் எனும் நிறுவனம் தொடங்கப்படும் என அறிவுத்துள்ளார்கள்.

யானைகள் மக்கள் வசிக்கும் இடங்களுக்கு வருவதற்கான காரணங்களை கண்டறியவும், யானை உள்ளிட்ட வனவிலங்களுக்கு தேவையான குடிநீர் ஆதாரத்தினை ஏற்படுத்திடவும் துறை அலுவலர்கள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு நடிவடிக்கை எடுக்கப்படும். கடந்த 10 ஆண்டுகளில் வனத்துறையில் நிலுவையிலுள்ள பொதுமக்களின் வழக்குகள் தீர்வு காணப்படாமல் நிலுவையில் உள்ளது. இதனை விரைவில் தீர்வு காண முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். அதனடிப்படையில் விரைவில் தீர்வுகாண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

வனத்துறைக்கு உட்பட்ட பகுதிகளில் சாலை அமைப்பது தொடர்பாக உள்ள பிரச்னைகளை விரைவாக தீர்வு காண வேண்டும் .எனவே சாலை அமைப்பது தொடர்பாக அனுமதி தேவைப்படும் சம்பந்தப்பட்ட துறைகள் இணைய வழியில் விண்ணப்பிக்க வேண்டும். அவ்வாறு உரிய வழிமுறைகளை முறையாக பின்பற்றி விண்ணப்பித்தால் விரைவாக அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பல ஆண்டுகளாக குடியிருந்து வரும் பொதுமக்கள் அனுமதி கோரும் பட்சத்தில் அதற்குரிய ஆதாரங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.பயிர் இழப்பீடு விவசாயிகளுக்கு குறைவாக வழங்கப்படுகிறது என‌ கோரிக்கை முன் வைக்கப்பட்டுள்ளது. பயிர் சேதாரங்கள் ஏற்படும் போது விவசாயிகள் செலவழித்த மொத்த தொகையினையும் இழப்பீடாக வழங்க முதல்வர் அறிவுறுத்தி உள்ளார்கள்.எனவே முழுமையாக இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன்.

இக்கூட்டத்தில், வனத்துறையின் செயல்படுத்தப்படும் திட்டப்பணிகளின் முன்னேற்றம், கூட்டு வன மேலாண்மை குழுக்களின் செயல்பாடுகள், சூழல் சாலை அமைக்க சுற்றுலா செயல்பாடுகள், பழங்குடியின மக்களின் அனுமதி நலன், வன உயிரினங்களால் மனித உயிரிழப்பு / பயிர் மற்றும் கால்நடை சேதத்திற்கு இழப்பீடு வழங்குதல் மற்றும் பொதுவான வனப்பாதுகாப்பு, சாலை அமைக்கும் பணிகள் உள்ளிட்டவைகள் குறித்து மாவட்ட விவசாயிகள், வனக்குழுவைச் சார்ந்தவர்கள் விரிவாக எடுத்துரைத்துள்ளனர்.

வன உயிரின மீட்பு மற்றும் பொதுமக்கள் உயிர்காக்கும் செயலில் சிறப்பாக செயல்பட்ட 6 நபர்களுக்கு சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகையினையும், வன உரிமைச்சட்டம் 2006-ன் கீழ் 15 நபர்களுக்கு 7.7139 ஏக்கர் நிலப்பரப்பிற்கு தனி உரிமமும், யானை தாக்கி உயிரிழந்த 4 நபர்களின் குடும்பத்தினருக்கு ரூ.16.00 இலட்சம் மதிப்பிலான நிவாரணத் தொகையினையும், யானை தாக்கி காயமடைந்த 2 நபர்களுக்கு ரூ.30.00 ஆயிரம் மதிப்பிலான நிவாரணத் தொகையினையும், யானைகளால் ஏற்பட்ட பயிர் சேதத்தால் பாதிக்கபட்ட 2 நபர்களுக்கு ரூ.50.00 ஆயிரம் மதிப்பிலான நிவாரணத் தொகையினையும், சுய உதவி குழுக்களுக்கு சுழல் நிதி கடன் 3 மகளிர் குழுக்களுக்கு ரூ.6.00 இலட்சம் மதிப்பிலான கடன் உதவித் தொகையினையும், வனத்தை நம்பி வாழும் தனி நபர்களுக்கு மாற்றுத்தொழில் செய்ய சுழல் நிதி கடன் 3 நபர்களுக்கு ரூ.30.00 ஆயிரம் மதிப்பிலான கடன் உதவித் தொகையினையும், 9 நபர்களுக்கு மரக்கன்றுகளையும் மற்றும் வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராம மக்களுக்கு, மனித-விலங்கு மோதலைத் தடுக்க 70 நபர்களுக்கு டார்ச் லைட்டுகள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கும் விதமாக 20 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் வழங்கினார்.

கூட்டத்தில், முதன்மை தலைமை வன பாதுகாவலர் டாக்டர்.சேகர் குமார் நீரஜ், கூடுதல் முதன்மை தலைமை வன பாதுகாவலர் வி.நாகநாதன், வன பாதுகாவலர் ஆ.பெரியசாமி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் தடங்கம் பெ.சுப்பிரமணி, பி.என்.பி.இன்பசேகரன், தர்மபுரி வன அலுவலர் கே.வி.அப்பல்ல நாயுடு, ஒசூர் வன உயிரின காப்பாளர் கார்த்திகேயினி, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) / திட்ட இயக்குனர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மரு.இரா.வைத்திநாதன், மாவட்ட வருவாய் அலுவலர்கள் சு.அனிதா (தர்மபுரி), ராஜேஸ்வரி (கிருஷ்ணகிரி), தர்மபுரி சார் ஆட்சியர் சித்ரா விஜயன், தர்மபுரி சமூக காடுகள் கோட்ட வன அலுவலர் பாஸ்கரன், கிருஷ்ணகிரி சமூக காடுகள் கோட்ட வன அலுவலர் மகேந்திரன் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Updated On: 18 Nov 2021 4:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மனமே உனக்கான நண்பனும் எதிரியும்..!
  2. அருப்புக்கோட்டை
    காரியாபட்டியில், திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு..!
  3. பூந்தமல்லி
    திருவேற்காடு அருகே பூட்டி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனம் திருட்டு
  4. காஞ்சிபுரம்
    பேராசிரியர் ஆவது எனது விருப்பம் : அரசுப்பள்ளி மாணவன்...!
  5. காஞ்சிபுரம்
    பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் 29 பள்ளிகள் நூற்றுக்கு நூறு...
  6. காஞ்சிபுரம்
    பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழில் நூற்றுக்கு நூறு ஒருவர் கூட...
  7. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் பத்தாம் வகுப்பு பொது தேர்வில் 87.55 சதவீதம்...
  8. காஞ்சிபுரம்
    ஓய்வு பெற்ற காவல்துறை சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் : எஸ்.பி...
  9. லைஃப்ஸ்டைல்
    மகன், தந்தைக்கு சேர்க்கும் புகழ் எது தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    மனித உணர்ச்சிகளின் நுணுக்கங்களையும் வெளிப்படுத்தும் நா. முத்துக்குமார்...