/* */

புத்தகங்கள் அச்சிடும் காகிதத்திற்கான ஜிஎஸ்டி வரி 18% நீக்க கோரிக்கை

புத்தகங்கள் அச்சிடப் பயன்படுத்தப்படும் காகிதத்திற்கான ஜிஎஸ்டி வரி 18% நீக்க, படைப்பாளர் பதிப்பாளர் சங்கத்தினர் கோரிக்கை

HIGHLIGHTS

புத்தகங்கள் அச்சிடும் காகிதத்திற்கான ஜிஎஸ்டி வரி 18%  நீக்க கோரிக்கை
X

தர்மபுரி மாவட்டப் படைப்பாளர் பதிப்பாளர் சங்க செயற்குழுக் கூட்டம் தர்மபுரி முத்து இல்லத்தில் நடைபெற்றது.

புத்தகங்கள் அச்சிடப் பயன்படுத்தப்படும் காகிதத்திற்கான ஜிஎஸ்டி வரி 18 சதவீதத்தை நீக்கவேண்டும் என தர்மபுரி மாவட்ட படைப்பாளர், பதிப்பாளர் சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

தர்மபுரி மாவட்டப் படைப்பாளர் பதிப்பாளர் சங்க செயற்குழுக் கூட்டம் நேற்று, தர்மபுரி முத்து இல்லத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத்தலைவர் நூலகர் சி. சரவணன் தலைமை வகித்தார். செயலாளர் கூத்தப்பாடி மா. பழனி சங்கத்தின் செயல் திட்டங்களைப் பற்றி எடுத்துரைத்தார்.

புத்தகங்கள் அச்சிடப் பயன்படுத்தப்படும் காகிதத்திற்கான ஜிஎஸ்டி வரி 18 சதவீதத்தை நீக்கவேண்டும், பத்து ஆண்டுகளாக முடங்கிக் கிடக்கும் படைப்பாளர் பதிப்பாளர் நல வாரியத்தை மீண்டும் தொடங்க வேண்டும், மாவட்ட படைப்பாளர்களின் நூல்கள் மைய நூலகத்தில் காட்சிப்படுத்த தனிப்பிரிவு ஏற்பாடுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் பொம்மிடி முருகேசன், கவிஞர் அன்பு தீபன், மாலதி அனந்தபத்மநாபன் உள்ளிட்ட படைப்பாளர், பதிப்பாளர்கள் திரளான கலந்து கொண்டனர்.

முன்னதாக சங்க ஆலோசகர் தமிழ் மகன் இளங்கோ வரவேற்புரை வழங்கினார். முடிவில் பொருளாளர் அறிவுடைநம்பி நன்றி கூறினார்.

Updated On: 29 Dec 2021 1:13 AM GMT

Related News

Latest News

  1. நத்தம்
    நத்தத்தில் அதிமுக சார்பில், நீர் மோர் பந்தல் திறப்பு: முன்னாள்...
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. ஆன்மீகம்
    காற்றையாவது காசு கொடுக்காமல் வாங்குவோம்..!
  5. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 82 கன அடியாக அதிகரிப்பு
  6. சினிமா
    டி.எம்.எஸ்.,சுக்கு உதவிய சிவாஜி..!
  7. சினிமா
    இளையராஜா பாடிய முதல் பாடலே ட்ரெண்ட் செட்டானது... எப்படி?
  8. தமிழ்நாடு
    ஓய்வூதிய பலன்கள் கிடைப்பதை உறுதி செய்ய அரசு அறிவுறுத்தல்..!
  9. அரசியல்
    நரேந்திரமோடி- வாஜ்பாய் ஒற்றுமைகள் என்ன?
  10. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்