/* */

சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கும் பணிகளை உடனே தொடங்க மா.கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

தர்மபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கும் பணிகளை உடனே தொடங்க வேண்டும்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வலியுறுத்தியுள்ளது.

HIGHLIGHTS

சிப்காட் தொழிற்பேட்டை அமைக்கும் பணிகளை உடனே தொடங்க மா.கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்
X

தர்மபுரியில் செய்தியாளர்களை சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் குணசேகரன்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலசெயற்குழு உறுப்பினர் குணசேகரன் தர்மபுரியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தர்மபுரி மாவட்ட மாநாடு அரூரில் வருகிற 16-ந்தேதி (வியாழக்கிழமை)17-ந்தேதி (வெள்ளிக்கிழமை) ஆகிய 2 நாட்கள் நடக்கிறது. இந்த மாநாட்டில் கட்சியின் மாநிலசெயலாளர் கே.பாலகிருஷ்ணன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்கிறார்கள். தர்மபுரி மாவட்டத்தில் விவசாயம் கடும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ள சூழலில் இந்த மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள், தொழிலாளர்கள் குடும்பம் குடும்பமாக வேலை தேடி வெளிமாநிலங்களுக்கு இடம்பெயரும் நிலை தொடர்கிறது.

சித்தேரி மலை கிராமங்களிலிருந்து வேலை தேடி பழங்குடி மக்கள் ஆந்திரா மாநிலத்திற்கு செல்கிறார்கள்.அங்கு இந்த மாவட்டத்தைச் சேர்ந்த பல தொழிலாளர்கள் போலீசாரால் சிறைபடுத்தப்பட்டுள்ளனர். அண்மையில் 2 தொழிலாளர்கள் மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர். இந்த பிரச்சினைக்கு தீர்வு காண தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மலைவாழ் பழங்குடி மக்களின் வாழ்வாதாரத்திற்கான வேலைவாய்ப்புகளை அந்தப் பகுதிகளிலேயே உருவாக்க வேண்டும்.

தர்மபுரி மாவட்டத்தில் தொடங்கப்பட்ட சிப்காட் தொழிற்பேட்டை பணி பாதியில் நிற்கிறது. உரிய நிதியை ஒதுக்கி தொழிற்பேட்டை விரைவில் செயல்பாட்டுக்கு வர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.தர்மபுரி மாவட்ட விவசாயிகள் வறட்சியால் பாதிக்கப்படுவதை தடுக்க ஒகேனக்கல் காவிரி உபரி திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.

தர்மபுரி மாவட்டத்தில் பொது சுகாதாரத்தை மேம்படுத்தவும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கி இந்த மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் அரசு சிறப்பு திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.இதுதொடர்பாக அரூரில் நடைபெறும் மாநாட்டில் விரிவாக விவாதிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்படும். தர்மபுரி மாவட்டத்தில் விவசாயிகளை பாதிக்கும் 8- வழி சாலை திட்டம், விவசாய நிலங்களில் பெட்ரோலிய குழாய் பதிக்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தொடர்ந்து போராட்டங்களை நடத்தி உள்ளது. இத்தகைய மக்கள் நல போராட்டங்கள் தொடரும்.

இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின் போது மாவட்ட செயலாளர் குமார் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Updated On: 14 Dec 2021 5:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மே 24 ! தேசிய சகோதரர்கள் தினம். கொண்டாடலாம் வாங்க
  2. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  3. லைஃப்ஸ்டைல்
    தன்னம்பிக்கை அளித்து ஊக்கமளிக்கும் பாசிடிவ் மேற்கோள்கள்
  4. நாமக்கல்
    ப.வேலூர் தர்காவில் மழைவேண்டி முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை
  5. நாமக்கல்
    பரமத்தி அருகே குடும்ப பிரச்சினையால் கட்டிட மேஸ்திரி தூக்கிட்டு ...
  6. உலகம்
    பூமி தன்னை பார்த்துக் கொள்ளும் ; மனிதனே உன்னை பார்த்துக்கொள்..!
  7. நாமக்கல்
    ப.வேலூரில் போலீசாருக்கு யோகா மற்றும் தியானப் பயிற்சி முகாம்..!
  8. க்ரைம்
    பொன்னேரி அருகே வீட்டின் முன் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண்...
  9. நாமக்கல்
    பச்சைமலை பகுதியில் நடைபெற்ற உழவாரப்பணியில் பங்கேற்ற சிவனடியார்கள்
  10. ஆன்மீகம்
    மர்ம நிழல்! விஞ்ஞானம் தோற்றது எப்படி? மெய்ஞானத்தால் அறிவியல் வளர்த்த...