/* */

தர்மபுரி மாவட்டத்தில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை கலெக்டர் துவக்கிவைப்பு

தர்மபுரி மாவட்டத்தில்நகராட்சி, பேரூராட்சிகள், ஊராட்சிகளில் மழைநீர் வடிகால்கள் தூர்வாரும் பணியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.

HIGHLIGHTS

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கும் நிலையில் வீடுகளில் மழைநீர் புகுவதை தடுக்கவும், மழைநீர் தேங்குவதால் மலேரியா,டெங்கு பாதிப்பை ஏற்படுத்தும் கொசுக்கள் உற்பத்தியை தடுக்கவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் அந்தந்த பகுதிகளில் சுற்றுப்புறத்தை தூய்மைப்படுத்தும் தீவிர துப்புரவு முகாம் நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி தர்மபுரி மாவட்டத்திலுள்ள ஒரு நகராட்சி 10 பேரூராட்சிகள், 10 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள 251 ஊராட்சிகள் ஆகியவற்றில் மாபெரும் மழைநீர் வடிகால்கள் தூர்வாரும் பணி மற்றும் தூய்மைப்படுத்தும் சிறப்பு முகாம் வருகிற 25-ஆம் தேதி வரை தொடர்ந்து நடைபெற உள்ளது.

இதன் ஒரு பகுதியாக தர்மபுரி ஊராட்சி ஒன்றியம் இலக்கியம்பட்டி ஊராட்சியில் தீவிர பயன்படுத்தும் முகாம் மற்றும் மழைநீர் வடிகால்கள் தூர்வாரும் முகாம் தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த முகாமை கலெக்டர் திவ்யதர்ஷினி தொடங்கி வைத்து கால்வாய்கள் தூர் வாரும் பணியை பார்வையிட்டார்.

இலக்கியம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட கலெக்டர் அலுவலக பகுதி, மின்வாரிய அலுவலக பகுதி ஆகியவற்றை ஒட்டிய சாலையோர கழிவு நீர்க் கால்வாய்களை தூர்வாரி சீரமைப்பதற்கான தூய்மை பணிமுகாம் கால்வாய்கள் மற்றும் மழைநீர் வடிக்கால்கள் தூய்மைபடுத்தும் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படுகிறது. இந்த பணிகளை பார்வையிட்ட கலெக்டர் தூய்மை பணிகளை தரமான முறையில் மேற்கொண்டு மழைநீர் மற்றும் கழிவுநீர் சாலை மற்றும் குடியிருப்பு பகுதிகளில் தேங்குவதை முழுமையாக தடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் கலெக்டர் வைத்திநாதன், ஊராட்சிகள் உதவி இயக்குனர் சீனிவாசசேகர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மகாலிங்கம், கணேசன், தாசில்தார் ராஜராஜன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முனிரத்தினம், ஊராட்சி தலைவர் சுதாரமேஷ், துணைத்தலைவர் வித்யாவெங்கடேசன், ஊராட்சி செயலர் சரவணன்,வார்டு உறுப்பினர்கள், தூய்மைப்பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 22 Sep 2021 6:53 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தூக்கமின்மைக்குத் தீர்வளிக்கும் உணவுகள்
  2. லைஃப்ஸ்டைல்
    அனுபவ வயல்களின் அறுவடை, முதிர்ச்சி..!
  3. ஆன்மீகம்
    அளவற்ற அன்பை அள்ளித் தருபவர் நபிகள் நாயகம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    குற்றப்பரம்பரை சட்டத்துக்கு எதிராக போராடிய முத்துராமலிங்க தேவர்..!
  5. லைஃப்ஸ்டைல்
    ஓய்வு என்பது வாழ்க்கையின் 2ம் குழந்தை பருவம்..!
  6. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  7. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  8. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  9. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  10. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?