/* */

தமிழகத்திற்கு திமுக, அதிமுக எதுவும் செய்யவில்லை: அன்புமணி ராமதாஸ் எம்பி குற்றச்சாட்டு

தமிழகத்திற்கு திமுக மற்றும் அதிமுக எதுவும் செய்யவில்லை என்று தர்மபுரியில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்பி குற்றம்சாட்டியுள்ளார்.

HIGHLIGHTS

தமிழகத்திற்கு திமுக, அதிமுக எதுவும் செய்யவில்லை:  அன்புமணி ராமதாஸ் எம்பி குற்றச்சாட்டு
X
  • தர்மபுரியில் நேற்று இரவு நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பாமக இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. பேசினார். 

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒரு நகராட்சி மற்றும் 10 பேரூராட்சிகளில் பாமக சார்பில் போட்டியிடும் 125 வேட்பாளர்களை ஆதரித்து தர்மபுரி குமாரசாமி பேட்டையில் உள்ள மைதானத்தில் தர்மபுரி சட்டமன்ற உறுப்பினரும், மேற்கு மாவட்ட செயலாளருமான எஸ்.பி.வெங்கடேஸ்வரன் தலைமையில் நடந்தது. கிழக்கு மாவட்ட செயலாளர் செந்தில் வரவேற்றார். பாமக இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம். பி. கலந்து கொண்டு வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரித்து தேர்தல் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசிய தாவது: நாம் தி.மு.க., அதிமுகவை நம்பி இருந்தோம். இனி நாம் தனியாக இருப்போம். பாமகவினர் நேர்மையானவர்கள். அதிமுகவினர் கோடீஸ்வரர்கள் கொள்ளையடித்து வைத்துள்ளார்கள். அதிமுக, திமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றால் வீட்டிலேயே இருப்பார்கள். பாமக வெற்றி பெற்றால் உங்களை சுற்றிதான் வருவார்கள். தர்மபுரி மாவட்டம் பாமகவின் கோட்டையாகும்.

தமிழகத்தில் தர்மபுரி தொழில் வளர்ச்சி இல்லாத கடைசி மாவட்டகும். இது தர்மபுரிக்கு ஒரு சாபக்கேடு. தர்மபுரி மாவட்டத்திற்கு சிப்காட் தொழிற்சாலையை யாரும் கொண்டு வரவில்லை. அடிக்கல் நாட்டுவது போன்ற கொடுமை வேறெதுவும் இல்லை. தர்மபுரி மாவட்ட மக்கள் பாவப்பட்டவர்கள். மாவட்ட வளர்ச்சிக்கு அதிமுக,-திமுக யாரும் எதுவும் செய்தது கிடையாது. தர்மபுரி நகராட்சியை பாமக கைப்பற்றும். தமிழகத்தில் பாமக வெற்றி பெற்று முதல் கையெழுத்து டாஸ்மாக் கடை மூட வைப்பதுதான்.

5 முறை எம்.எல்.ஏவாக கே.பி.அன்பழகன் இருந்தும் நீர் பாசன திட்டம் குறித்து எதுவும் தெரியவில்லை. 10 அணைகள் இருந்து எந்த உபரிநீர் நீர் திட்டமும் மாவட்டத்தில் நிறைவேறவில்லை. ஒகேனக்கல் உபரிநீர் திட்டம் 10.15 லட்சம் கையெழுத்து வாங்கி எடப்பாடியிடம் கொடுத்தோம். இன்று வரை இந்த திட்டத்தை நிறைவேற்றவில்லை. தர்மபுரி மக்களை எடப்பாடியார் ஏமாற்றி விட்டார். மாற்றம் முன்னேற்றம் வேண்டும் என்றால் உள்ளாட்சி யில் பாமகவுக்கு வாக்களியுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

இதில் முன்னாள் எம்பிக்கள் டாக்டர் செந்தில், பாரிமோகன், முன்னாள் எம்எல்ஏ வேலுசாமி, நிர்வாகிகள் சாந்தமூர்த்தி, பாடி செல்வம், முருகசாமி, சண்முகம், பெரியசாமி, செல்வகுமார், அரசாங்கம், இமயவர்மன், மாது, ராமகிருஷ்ண, நாகராஜன், ராமலிங்கம், வணங்காமுடி, நம்பிராஜன் சுப்பிரமணி, முத்துசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Updated On: 17 Feb 2022 6:01 AM GMT

Related News

Latest News

  1. நத்தம்
    நத்தத்தில் அதிமுக சார்பில், நீர் மோர் பந்தல் திறப்பு: முன்னாள்...
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. ஆன்மீகம்
    காற்றையாவது காசு கொடுக்காமல் வாங்குவோம்..!
  5. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 82 கன அடியாக அதிகரிப்பு
  6. சினிமா
    டி.எம்.எஸ்.,சுக்கு உதவிய சிவாஜி..!
  7. சினிமா
    இளையராஜா பாடிய முதல் பாடலே ட்ரெண்ட் செட்டானது... எப்படி?
  8. தமிழ்நாடு
    ஓய்வூதிய பலன்கள் கிடைப்பதை உறுதி செய்ய அரசு அறிவுறுத்தல்..!
  9. அரசியல்
    நரேந்திரமோடி- வாஜ்பாய் ஒற்றுமைகள் என்ன?
  10. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்