/* */

கோவையில் புதிதாக 215 பேருக்கு கொரோனா தொற்று: 4 பேர் உயிரிழப்பு

கோவை மாவட்டத்தில் இன்று புதிதாக 215 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது ; 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

HIGHLIGHTS

கோவையில் புதிதாக 215 பேருக்கு கொரோனா தொற்று: 4 பேர் உயிரிழப்பு
X

கொரோனா பரிசோதனை

கோவை மாவட்டத்தில் நேற்றைய தினத்தை விட இன்று 14 பேருக்கு கூடுதலாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. கோவையில் இன்று 215 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்புகள் உறுதியாகியுள்ளது. இதனால், கோவை மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்து 40 ஆயிரத்து 241 ஆக உயர்ந்துள்ளது. மருத்துவமனைகள் மற்றும் சிகிச்சை மையங்களில் 2198 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாள்தோறும் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை மீண்டும் குறைந்து வருகிறது.

இன்று கொரோனா தொற்றில் இருந்து 217 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 35 ஆயிரத்து 726 பேராக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்பால் இன்று 4 பேர் உயிரிழந்தனர். கோவை மாவட்டத்தில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2317 ஆக அதிகரித்துள்ளது.

Updated On: 19 Sep 2021 1:45 PM GMT

Related News

Latest News

  1. வால்பாறை
    வறட்சி காரணமாக டாப்சிலிப் யானைகள் முகாமில் இருந்து 20 வளர்ப்பு யானைகள்...
  2. வீடியோ
    Muslim என்று மோடி சொன்னாரா ? கொந்தளித்த இராம ஸ்ரீனிவாசன் !#muslim...
  3. தென்காசி
    போக்குவரத்து காவலர்களுக்கு நீர்மோர் வழங்கிய மாவட்ட காவல்...
  4. தென்காசி
    வெயிலின் தாக்கம் எதிரொலி; எலுமிச்சை கிலோ 140க்கு விற்பனை
  5. கோவை மாநகர்
    விபத்தில் மரணமடைந்த பாஜக நிர்வாகி ; வானதி சீனிவாசன் அஞ்சலி
  6. ஈரோடு
    ஈரோடு: பர்கூர் மலைப்பாதையில் திரும்ப முடியாமல் நின்ற டேங்கர் லாரி
  7. கோவை மாநகர்
    வாலாங்குளம் படகு இல்லத்தில் கட்டணத்தை குறைக்க வேண்டும் - காங்கிரஸ்...
  8. காஞ்சிபுரம்
    சுடுகாடு எங்கே ? தேடி அலைந்த இருளர் குடியிருப்பு வாசிகள்!
  9. காஞ்சிபுரம்
    உள்துறை அமைச்சர் பதவிக்கு தகுதியற்றவர் ஸ்டாலின் - ஜெயக்குமார்!
  10. மதுரை மாநகர்
    மதுரையில் பழிக்குப்பழியாக பட்டப்பகலில் இளைஞர் வெட்டிக் கொலை