கோவையில் ஒமிக்ரான் பாதிப்பு இல்லை: மாவட்ட ஆட்சியர் சமீரன்

கொரோனா தொற்று பரவல் இருப்பதால் கோவையில் கட்டுப்பாடுகளை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
கோவையில் ஒமிக்ரான் பாதிப்பு இல்லை: மாவட்ட ஆட்சியர் சமீரன்
X

தடுப்பூசி போடும் பணிகளை துவக்கி வைத்த ஆட்சியர் சமீரன்.

தமிழ்நாடு முழுவதும் இன்று முதல் 15 முதல் 18 வயதுடைய சிறார்களுக்கு தடுப்பூசி போடும் பணிகளை முதலமைச்சர் இன்று துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களை தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு தடுப்பூசி போடும் பணியினை மாவட்ட ஆட்சியர் சமீரன் இன்று துவங்கி வைத்தார். கோவை பாப்பநாயக்கன் பாளையத்தில் அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளியில் இந்த முகாமினை மாவட்ட ஆட்சியர் சமீரன், மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுங்கரா ஆகியோர் துவக்கி வைத்தனர்.

இதன் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர், கோவை மாவட்டத்தில் தடுப்பூசி போடும் திட்டத்தால் 1.61 லட்சம் மாணவர்கள் பயன் பெறுகின்றர். 671 பள்ளிகளில் தடுப்பூசி போடப்படுகின்றது. முதல் நாளான இன்று 81 மையங்களில் 16 ஆயிரம் மாணவர்களுக்கு இன்று தடுப்பூசி போடப்படுகின்றது. கோவையில் ஒமிக்ரான் தொற்று ஒருவருக்கு மட்டும் கண்டறியப்பட்டு தற்போது அவர் சிகிச்சை முடிந்து வீட்டில் தனிமைபடுத்தப்பட்டுள்ளார். கொரோனா தொற்று பரவல் இருப்பதால் கோவையில் கட்டுப்பாடுகளை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் இருந்து வந்த 19 பேரின் மாதிரிகள் சோகரிக்கப்பட்டதில் அவர்களில் யாருக்கும் ஒமிக்ரான் பாதிப்பு இல்லை. கொரோனா விதிமுறை மீறல் இருந்தால் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். மாணவர்களுக்கு தடுப்பூசி போட்ட பின் உடல்நிலை பாதிப்பு இருந்தால் மட்டும் அவர்களுக்கு விடுமுறை அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோவையில் டெங்கு பாதிப்பு இருக்கின்றது ஒரு சில இடங்கள் ஹாட் ஸ்பாட்டாக கண்டறியப்பட்டு அந்த பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளோம். மாவட்டத்தில் கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கோவையில் இதுவரை 33 பேர் டெங்கு பாதிபபில் இருக்கின்றனர். கோவையில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், கொரோனா வழிகாட்டுதல்களால் போட்டி நடத்துவதா என்பது குறித்து மாநில அரசின் வழிகாட்டுதலுக்காக காத்திருக்கின்றோம் என தெரிவித்தார்.

Updated On: 3 Jan 2022 10:00 AM GMT

Related News

Latest News

 1. தென்காசி
  தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரம்
 2. பொன்னேரி
  வயிற்றுப்போக்கு காரணத்தினால் 12 ம் வகுப்பு மாணவி உயிரிழப்பு
 3. உசிலம்பட்டி
  காமராசர் பல்கலையில் போராட்டத்தில் ஈடுபட்ட தொகுப்பூதிய பணியாளர் பலி
 4. விழுப்புரம்
  விழுப்புரம் நீதிமன்றத்தில் 2 ஆயிரம் வழக்குகள் தீர்வு
 5. தென்காசி
  தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
 6. திருவண்ணாமலை
  திருவண்ணாமலை: பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு
 7. திருவண்ணாமலை
  திருவண்ணாமலை மாவட்ட பள்ளி, கல்லூரி விடுதிகளில் மாணவர் சேர்க்கை
 8. ஈரோடு
  சித்தோடு அருகே இருசக்கர வாகனத்தில் கஞ்சா கடத்திய 3 பேர் கைது
 9. நாமக்கல்
  கோரிக்கை மனுக்களை மாலையாக அணிந்து வந்த பெண்: கலெக்டர் அலுவலகத்தில்...
 10. நாமக்கல்
  அக்னிபாத் திட்டத்தை கைவிடக்கோரி நாமக்கல் மாவட்ட காங்கிரசார்...