/* */

வியாபாரிகளுடன் தகராறு செய்பவர்கள் மீது குண்டர் சட்டம்: விக்கிரமராஜா கோரிக்கை

வணிகர்களுக்கு இடையூறு செய்யும் ரவுடிகள், கட்டப்பஞ்சாயத்து பேர்வழிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்

HIGHLIGHTS

வியாபாரிகளுடன் தகராறு செய்பவர்கள் மீது  குண்டர் சட்டம்: விக்கிரமராஜா கோரிக்கை
X

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா

வணிகர்களிடம் தகராறு செய்யும் ரவுடிகள், கட்டப்பஞ்சாயத்து பேர்வழிகள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சென்னை, காஞ்சிபுரம் மண்டல மாநில நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம் சென்னை கிண்டியில் உள்ள தனியார் விடுதியில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தலைமையில் நடைபெற்றது.

இதில், வணிகர் சங்கங்களின் பேரமைப்பு விடுத்த கோரிக்கையை பரிசீலித்து, பள்ளிகள் கோயில்கள் மற்றும் பெண்கள் அதிகம் நடமாடும் மார்க்கெட் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் மது கடைகள அகற்றப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளதற்கு தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு சார்பில் பாராட்டு தெரிவிப்பது. கொரோனா தடுப்பு ஊசி, சேவை கட்டணம் இல்லாமல் வணிகர் நல வாரிய உறுப்பினர் சேர்க்கை, வணிகர் நல வாரியத்தை சீரமைத்து செயல்படுவது என்பன உள்ளிட்ட 11 தீர்மானங்களை நிறைவேற்றப்பட்டன.

பின்னர், நிருபர்களிடம் ஏ.எம். விக்கிரமராஜா கூறுகையில், தமிழகம் முழுவதும் மாவட்ட அளவில் வாரியத்தை கட்டமைப்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த கூட்டத் தொடரின் நோக்கம் வியாபாரிகளுக்கிடையேயான இடர்பாடுகளை தடுக்க வேண்டும் என்பது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்.

சென்னை மாநகரத்தை மூன்றாக பிரித்து, தாம்பரம், ஆவடி என புதிய மாநகராட்சிகளை முதல்வர் அறிவித்ததற்கு பேரமைப்பு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது.தமிழ்நாடு முழுவதும் உள்ளாட்சி நகராட்சி பேரூராட்சியில் உள்ள கடைகளுக்கு சீரான வாடகை அமல்படுத்த வேண்டும். வியாபாரிகளின் அச்ச உணர்வை போக்கும் விதத்தில் தேவையில்லாமல் தகராறு செய்தவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்,

வணிகத்துறையில் இடையூறாக செயல்படும் ரவுடிகள், கட்டப்பஞ்சாயத்து பேர்வழிகள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தாமல் இருக்க மாற்று வழியை அரசு ஏற்பாடு செய்து தர வேண்டும். இது குறித்து மாநகராட்சி ஆணையர், அதிகாரிகளுடன் பிளாஸ்டிக் மொத்த உற்பத்தியாளர்களுடன் வணிகர் சங்கங்களின் பேரமைப்பு ஆலோசனை நடத்தவுள்ளது..

தடையை மீறி குட்கா வியாபாரம் செய்பவர்களை முக்கியமாக மொத்த வியாபாரம் செய்யும் ஈரோடு, திருப்பத்தூர் போன்ற மாவட்டத்தை சேர்ந்தவர்களை நாங்கள் அடையாளம் காட்டி உள்ளோம். இப்படித் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் மொத்தமாக விற்பவர்கள் மீது குண்டர் சட்டம் பாய வேண்டும். வெளிநாட்டு பானங்களை தவிர்த்து உள்நாட்டு பானங்களை உபயோகிக்க பேரமைப்பு அறிவுறுத்தி வருகிறது. மேலும், பனையில் இருந்து கிடைக்கும் பதநீரை பயன்படுத்த தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென பேரமைப்பு சார்பில் வலியுறுத்தி உள்ளோம். மிகப் பெரிய மருத்துவம் பொருட்கள் கொண்ட பனை பொருட்களை பயன்படுத்துவதில்அரசு கவனம் செலுத்த வேண்டும்,

சாலையோர கடை வியாபாரிகளுக்கு தனி இடம் ஒதுக்கி அவர்கள் வியாபாரத்திற்கு ஏதுவாக அரசு வழிவகை செய்யவேண்டும் என்றார் ஏ.எம். விக்கிரமராஜா. இதில், வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில, மண்டல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 15 Sep 2021 12:59 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    விறுவிறு விலையேற்றம் தங்கமே.... தங்கம்...!
  2. தமிழ்நாடு
    பொறியியல் சேர்க்கை எப்போது விண்ணப்பிக்கலாம்?
  3. லைஃப்ஸ்டைல்
    35 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான எடை இழப்பு சாத்தியமா?
  4. கோவை மாநகர்
    வடவள்ளியில் கோவில் நகைகளை திருடிய அர்ச்சகர் கைது
  5. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால் பூனை கூட புலியாகும்..!
  6. காஞ்சிபுரம்
    வெள்ளித் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீ...
  7. தொழில்நுட்பம்
    சென்ஹெய்சர் மொமென்டம் ட்ரூ வயர்லெஸ் 4: இந்தியாவில் விலை அறிமுகம்!
  8. லைஃப்ஸ்டைல்
    எது உங்களுக்கான வாழ்க்கை என்பதை நீங்களே தீர்மானிங்க..!
  9. தொழில்நுட்பம்
    OnePlus 13 குறித்து தெரிந்துகொள்வோமா?
  10. லைஃப்ஸ்டைல்
    எள்ளு உருண்டையில் இவ்வளவு நன்மைகள் இருக்குதா?