/* */

பயணிகளுக்கு மகிழ்ச்சி செய்தி, மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு

மெட்ரோ ரயில்‌ சேவைகள்‌ வரும் திங்கள் கிழமை முதல்‌ காலை 5.30 மணி முதல்‌ இரவு 10 மணி வரை இயக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

HIGHLIGHTS

பயணிகளுக்கு மகிழ்ச்சி செய்தி, மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவிப்பு
X

மெட்ரோ ரயில் (பைல் படம்)

இதுகுறித்து மெட்ரோ இரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது

சென்னை மெட்ரோ ரயில்‌ பயணிகளின்‌ வேண்டுகோளுக்கு இணங்கவும்‌, வசதிக்காகவும்‌ வருகின்ற திங்கள்கிழமை (12.07.2021) முதல்‌ வார நாட்களில்‌ (திங்கள்கிழமை முதல்‌ சனிக்கிழமை வரை) மெட்ரோ இரயில்‌ சேவைகள்‌ காலை 05.30 மணி முதல்‌ இரவு 10.00 மணி வரை இயக்கப்படவுள்ளன.

மெட்ரோ இரயில்‌ சேவைகள்‌ நெரிசல்மிகு நேரங்களில்‌ (Peak Hours) காலை 8 மணி முதல்‌ 11 மணி வரையிலும்‌, மாலை 5 மணி முதல்‌ இரவு 8 மணி வரையிலும்‌ 5 நிமிட இடைவெளியில்‌ இயக்கப்படும்‌. மற்ற நேரங்களில்‌ (Non-PeakHours) 10 நிமிட இடைவெளியில்‌ மெட்ரோ இரயில்கள்‌ இயக்கப்படும்‌.

மெட்ரோ இரயில்‌ சேவைகள்‌ அனைத்து ஞாயிற்றுக்கிழமைகள்‌ மற்றும்‌ அரசுப்‌ பொது விடுமுறை நாட்களில்‌ காலை 07.00 மணி முதல்‌ இரவு 09.00 மணி வரை 10 நிமிட இடைவெளியில்‌ இயக்கப்படும்‌.

மெட்ரோ ரயில்‌ நிலையங்கள்‌ மற்றும்‌ மெட்ரோ ரயில்களில்‌ நுழைவதற்கு அனைத்து பயணிகளும்‌ கட்டாயம்‌ முகக்கவசம்‌ அணிந்திருக்க வேண்டும்‌. பயணிகள்‌ முகக்கவசம்‌ அணியாவிட்டாலோ அல்லது முகக்கவசத்தை சரியாக அணியவில்லை என்றாலோ உடனடி அபராதமாக ரூ.200 வசூலிக்கப்படுகிறது.

21.06.2021 முதல்‌ 09.07.2021 வரை முகக்கவசத்தை அணியாமல்‌ அல்லது சரியாக அணியாமல்‌ பயணம்‌ செய்ததற்காக 40 பயணிகளிடமிருந்து அபராதமாக ரூ.8000 வசூலிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ்‌ தொற்றை தடுப்பதற்காகவும்‌ அனைத்து பயணிகளின்‌ பாதுகாப்பான பயணத்திற்காகவும்‌ மெட்ரோ ரயில்‌ நிலையங்களில்‌ நுழைவதற்கும்‌ மெட்ரோ ரயில்களில்‌ பயணிப்பதற்கும்‌ அனைத்து பயணிகளும்‌ கட்டாயம்‌ சரியாக முகக்கவசம்‌ அணிந்திருப்பதுடன்‌ தனிமனித இடைவெளியைக்‌ கடைபிடித்து பயணம்‌ செய்து சென்னை மெட்ரோ இரயில்‌ நிறுவனத்திற்கு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Updated On: 10 July 2021 5:36 PM GMT

Related News

Latest News

  1. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதை கழிப்பறைகள் பராமரிப்பு, மகளிர் குழுவினருக்கு ஊக்கத்தொகை...
  2. நாமக்கல்
    மோகனூர் வடக்கு துணை அஞ்சலகம் திடீர் இடமாற்றம்: பொதுமக்கள் அதிர்ச்சி
  3. செங்கம்
    சூறைக்காற்றால், திருவண்ணாமலை மாவட்டத்தில் வாழைகள் சேதம்
  4. நாமக்கல்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி 14 அரசுப் பள்ளிகளுக்கு...
  5. இந்தியா
    ம‌க்களவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்த‌ல்: 93 தொகுதிகளி‌ல் 64% வா‌க்கு‌ப்பதிவு
  6. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  7. ஆரணி
    பட்டா பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய விஏஓ கைது
  8. திருவண்ணாமலை
    மழை வேண்டி திருவாசகத்தை சுமந்தபடி கிரிவலம்
  9. கோவை மாநகர்
    திமுகவிற்கு எதிராக பேசியதால் போலீஸ் மூலம் பழிவாங்குகின்றனர்; சவுக்கு...
  10. லைஃப்ஸ்டைல்
    சகோதரிகள், இணை பிரியா தோழிகள்..!