பாமக தலைமை தொண்டர்களை நல் வழிப்படுத்த வேண்டும்: விசிக தலைவர் திருமாவளவன்

பாமக தலைமை தொண்டர்களை நல் வழிப்படுத்த வேண்டும் என்று விசிக தலைவர் தொல் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

HIGHLIGHTS

 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
 • Whatsapp
 • Telegram
 • Linkedin
 • Print
 • koo
பாமக தலைமை தொண்டர்களை நல் வழிப்படுத்த வேண்டும்: விசிக தலைவர் திருமாவளவன்
X

விசிக கட்சி தலைவர் தொல் திருமாவளவன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்தார்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலினை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் நேரில் சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன் கூறியதாவது.

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆண்டுதோறும் ஆளுமை வாய்ந்த சான்றோர்களை விருதுகள் வழங்கி சிறப்பித்து வருகிறோம், அந்த வகையில் 2021 ஆம் ஆண்டுக்கான குறிப்பிட்ட ஆறு விருதுகளை தேர்வு செய்து, அதில் 2021 ஆம் ஆண்டுக்கான அம்பேத்கர் சுடர் விருது தமிழக முதல்வர் ஸ்டாலின் வழங்க தீர்மானித்திருந்தோம்.

அதனடிப்படையில் இன்று முதல்வர் அவர்களை நேரில் சந்தித்து விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தோம். வருகின்ற டிசம்பர் 24ஆம் தேதி விழா சென்னையில் நடைபெறுகிறது இடம் இன்னும் தேர்வு செய்யப்படவில்லை என கூறினார்.

கவிஞர் முடியரசனின் மணிமண்டபம் காரைக்குடியில் அமைக்க வேண்டும் எனவும் குறவர் சமூகத்தின் நீண்டகால கோரிக்கையான சங்ககால பெண் புலவர் இளவேனிலுக்கு மதுரையில் மணிமண்டபம் அமைக்க வேண்டும் எனவும் முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளோம்.

பட்டியலின மற்றும் பழங்குடி கல்லூரி மாணவர்கள் பயன்பெறும் வகையில் அவர்களுக்கு வழங்கும் கல்வி உதவித்தொகையை பெற ஆண்டு வருமானம் 2 .5 லட்சமாக உள்ளது அந்த வருமான வரம்பை தளர்த்தி அறிவிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளோம்.

பட்டியலின மற்றும் பழங்குடி இன மக்கள் தங்களது சாதி சான்றிதழ் பெறும் போது அவர்களது சாதிப் பெயரின் விகுதியில் உள்ள 'ன்' என்பதை 'ர்' என மாற்றி புதிய அரசாணை வெளியிட வேண்டும் என தமிழக முதலமைச்சரை வலியுறுத்தியுள்ளோம் என கூறினார்.

பாமக எந்த சமூகத்திற்காக பாடுபாடுகிறோம் என்று சொல்கிறார்களோ அதே சமூகம் பொதுவெளியில் வன்முறையை தூண்டும் வகையில் அறிக்கைகள் வெளியிடுகிறார்கள் தலைவர்களே இது போன்ற செயல்களைச் செய்கிறார்கள் என கூறினார்.

இதனால் சமூக பதற்றம் ஏற்படும் சூழல் அதிகரித்துள்ளது. இது தடுக்கப்பட, தவிர்கப்பட வேண்டும் என கூறினார். உள்நோக்கம் எதுவுமில்லை என்று நடிகர் சூர்யா அறிவித்த பிறகு, பாமக தலைமை தம் தொண்டர்களை நல்வழிப்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

ஜெய்பீம் தொடர்பாக பெரிய நடிகர்கள் குரல் கொடுக்கவில்லையே என்ற கேள்விக்கு இதைப் பெரிதுபடுத்த வேண்டாம் என உச்ச நட்சத்திரங்களின் எண்ணமாக இருக்கலாம் அதனால் இந்த விவகாரத்தை கடந்துசெல்ல மௌனமாக இருப்பதாகும், நமது எண்ணமும் அதுவே எனவும் அவர் கூறினார்.

எழும்பூர் பகுதியில் சாலையில் வசிக்கும் மக்களை அருகிலுள்ள கண்ணப்பர் திடலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் அவர்களுக்கு அடிப்படை வசதிகள் இல்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் அது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு அது குறித்து முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் எனவும் 20 நாட்களில் அவர்களுக்கு குடியிருப்பு வழங்குவதாக தெரிவித்திருந்த நிலையில் தற்போது வரை குடியிருப்பு வழங்காதது குறித்து அதிகாரிகள் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வார்கள் எனவும் அவர்கள் கொண்டு செல்லாத பட்சத்தில், முதலமைச்சரின் கவனத்திற்கு தாம் கொண்டு செல்வேன் எனவும் கூறினார். அதேபோல் கள்ளக்குறிச்சியில் பழங்குடியினர் 5 பேர் வலுக்கட்டாயமாக காவல்துறையினர் விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்றது குறித்து தமிழக முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்வோம் எனவும் கூறினார்

Updated On: 17 Nov 2021 8:50 PM GMT

Related News

Latest News

 1. பாளையங்கோட்டை
  நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
 2. தென்காசி
  தென்காசி உழவர் சந்தையில் இன்றைய காய்கறி விலை நிலவரம்
 3. நாமக்கல்
  ஈஷா காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் விவசாய நிலங்களில் மரம் நடும்...
 4. நாமக்கல்
  நாமக்கல் மாவட்ட காங்கிரஸ் சார்பில் காந்தி பிறந்தநாள் விழா..!
 5. திருவண்ணாமலை
  திருவண்ணாமலை நகரை தூய்மைப்படுத்த பேட்டரி வாகனங்கள்
 6. திருவண்ணாமலை
  காந்தி ஜெயந்தி தினத்தன்று விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது
 7. வந்தவாசி
  திருவண்ணாமலை மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகளும் கிராம சபை கூட்டம்
 8. ஆன்மீகம்
  சனிபகவான் கோயிலில் இப்படியா? கொந்தளிக்கும் இந்து எழுச்சி முன்னணி
 9. ஆன்மீகம்
  Horoscope Today அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
 10. நாமக்கல்
  நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி , பழங்கள் விலை நிலவரம்